பயன்படுத்தப்பட்ட ஓர் சால்வை A SECONDHANDED ROBE பிரான்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 1956-11-25M 1. நான் மேய்ப்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் சொன்னேன்... அவர் நேற்று என்னை அழைத்தாரா என்று அவரிடம் கேட்டேன்; நான் கண்டுகொண்டேன், நான்... நாள் முழுவதும் ஒரு அழைப்பும் வரவில்லை, நான், ‘நல்லது, என்ன பிரச்சனையாயிருக்கும் என்று ஆச்சரியமாக உள்ளதே-? ஏதாவது... எல்லாம் மிகவும் நன்றாய் உள்ளதே’ என்று எண்ணினேன். சிறிது கழித்து, சகோதரி உட் வெகு சில அழைப்புகளோடு வந்தார்கள்; என்னுடைய தொலை பேசியானது செயலிழந்து போயிருந்தது. எனவே நீங்கள் யாராவது அழைத்து இருந்தால்... தொலைபேசி மணி ஒலிக்கிறது, ஆனால் அதிலிருந்து சத்தம் வருவதில்லை; இவ்வாறாக தொலைபேசி தொடர்பு இணைப்பு முனையில் தான் (switchboard) கோளாறு இருந்தது. அவர்கள் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் அல்லது அதற்கும் சிறிது முன்பதாக அதை சரி செய்தனர், அந்த தொலைபேசியானது... இப்பொழுது அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. 2. இந்தக் காலை வேளையில் இந்த ஆராதனையில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாய் உள்ளது. எனக்கு பயங்கரமான ஜலதோசம் பிடித்திருந்தது, வழக்கமாக நான் வீட்டிற்கு வரும் போது அதைப் பெற்றுக் கொள்கிறேன். இடுப்பு வரையிலான பனியில் நடந்து, இரவில் தூக்கமின்றி, நியூ ஆல்பனியிலுள்ள அந்த மலையைக் கடப்பதைத் தவிர வேறு எதையும் எண்ணாமல் இந்தப் பள்ளத்தாக்கை அடைந்த போது, நான் கடுமையான ஜலதோசத்தைப் பெற்றுக் கொண்டேன். மேலும் அது... எனக்குத் தெரியவில்லை; இந்தப் பள்ளத்தாக்கை உஷ்ணம் குறைந்த இடமாக வைப்பதற்கு இங்கே ஏதோவொன்றுள்ளது. நீங்கள் அதைக் குறித்து ஒரு போதும் என்னுடன் இணங்காமல் இருக்கலாம். இப்பொழுது, நான் கூறியபடி, இந்த சபையில் இருப்பதற்கும், நம்முடைய அருமையான மேய்ப்பர் நமக்காக கர்த்தராகிய இயேசுவிடம் ஏறெடுக்கும் ஜெப விண்ணப்பத்தின் வார்த்தைகளைக் கேட்பதற்கும் நாம் மகிழ்ச்சியாய் இருக்கிறோம். கேட்பதை... அநேக வியாதியஸ்தர்களும் தேவையுள்ளவர்களும் இங்கிருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு துக்கமடைகிறோம். ஒவ்வொருவரையும் வியாதியில் விழும்படி வைக்க பிசாசானவன் எவ்வளவு கடுங்கோபத்துடன் கிரியை செய்கிறான். ஒரு ஸ்திரீ அங்கே பின்னால் இருக்கும் அவளுடைய சகோதரியைக் குறித்து என்னிடம் சொன்னாள். சகோதரி சைரஸ் அவளுடன் இருந்தாள் என்று அறிவேன். இப்பொழுது மருத்துவர் அவள் மரித்து விடுவாள் என்று அவளைக் கை விட்டு வீட்டிற்கு அனுப்பி விட்டார். அவள் தான் சுகமடையப் போவதாக இன்னும் விசுவாசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் மோசமான, மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். என்னுடைய மாமியாரும் அவ்விதமாகவே இருக்கிறார்கள். இப்பொழுது 70 வயதாகும் அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். தேசத்தைச் சுற்றிலும் நிச்சயமாகவே அநேக வியாதியஸ்தர்கள் உள்ளனர். நாம் மாத்திரம் அவரிடம் தயவைப் பெறக் கூடுமானால், நம்முடைய வியாதிகளை சுகப்படுத்த தேசத்தைச் சுற்றிலும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். (நீங்கள் பாருங்கள்-?) 3. இப்பொழுது, என்னுடைய தொண்டை கரகரப்பாக உள்ளது, கரகரப்பாக அல்ல, ஆனால் என்னுடைய தொண்டை புண்ணாயுள்ளது. நான் பிரசங்கிக்க முயற்சிக்கப் போவதில்லை, ஆனால் அப்படியே சிறிது நேரம் வார்த்தையைக் குறித்து உங்களிடம் பேசி விட்டு, நான் செய்வேன் என்று வாக்களித்தபடி வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறேன். ஆனால் அதைச் செய்வதற்கு முன்பாக, இன்னும் சில கூட்டங்களைக் குறித்த அறிவிப்புகளை கொடுக்க விரும்புகிறேன். நான்... என்னுடைய ஆராதனைகளில் சிறிது எதிர்ப்பு உள்ளது, அது எதிர்ப்பு அல்ல, ஆனால் கொஞ்சம் தவறான புரிந்து கொள்ளுதல்கள். நான் – நான் ஊழியக்களத்திலுள்ள மற்ற அநேக சகோதரர்களைப் போல ரேடியோ, தொலைக் காட்சி, மாதப்பத்திரிகை மற்றும் இதர வழிமுறைகளை (outlet) என் ஆராதனையில் கொண்டிருப்பது கிடையாது. ஏன், நான் அப்படிச் செய்வேனானால், யாரோ ஒருவர், ‘சகோதரன் பிரன்ஹாம் இங்கிருக்கப் போகிறார்’ என்று கூறுவார்... இப்பொழுது, நான் இவ்வாரத்தில் மூன்று இடங்களில் கூட்டங்களைக் கொண்டிருக்கப் போகிறேன் என்று இன்று அறிவிக்கிறேன். மூன்று வித்தியாசமான இடங்கள்: எனக்குத் தெரிந்தபடி ஒன்று கென்டக்கியில், இரண்டாவது கலிபோர்னியாவில். அதைக்குறித்து உங்களால் எதுவும் செய்ய முடியாது, ஏனெனில் மற்ற எந்த அதிகாரப்பூர்வமான வழியும் (outlet) எனக்குக் கிடையாது. எனவே அது ஒருவகையாக கடினமாக இருக்கிறது. 4. கென்டக்கியிலுள்ள மடிசன்வில்லிலிருந்து வந்து, யாராவது இங்கிருக்க நேர்ந்தால், நான் அங்கு இருப்பேன் என்று சென்ற வாரம் அறிவித்திருந்தேன், அதைக்குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் வீட்டிற்கு வந்தேன், அவர்கள் அதை அறிவித்திருந்தனர், எத்திங்ஸ் என்ற பெயருடைய சகோதரன் தான் அதை அறிவித்தவர், அதுதான் அவருடைய பெயரென்று நான் நம்புகிறேன், முழு உறுதியான விசுவாசத்துடன் அவர் அதைச் செய்தார். ஜனங்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும்படியாக ஒரு ஆசீர்வாதமாக இருப்பதற்கு நம்மால் அங்கு வரக்கூடுமா என்று அவர் என்னை அழைத்தார். அவர் அழைத்தார்; சகோதரன் மூரிடம் கேட்க வேண்டுமென்று அவரிடம் கூறினேன். நல்லது அப்படியானால், நான் கடந்து சென்றாக வேண்டும். நான் அதே தினத்தில் கடந்து செல்ல வேண்டியிருப்பதாக அவரிடம் கூறினேன். நல்லது, யாருக்காவது அறிவிக்க சகோதரன் மூர் தவறி விட்டார். மேலும்... நான் அறிந்து கொள்வதற்கோ அல்லது என்னுடைய மனைவி அறிந்து கொள்வதற்கோ. எனவே நான் இடாகோவில் இருந்தேன், அங்கிருந்து இப்பொழுது தான் திரும்பி வந்தேன், அங்கு கூட்டம் இருந்தது. எனவே – எனவே நான் கண்டேன்... இங்கே நடக்கப்போகிற கூட்டங்களுக்காக லூயிஸியானாவிலிருந்து ஏற்பாடு செய்ய முடியாது. எனவே என்னுடைய கூட்டங்கள்... அது வரை நானே ஏற்பாடுகளை செய்கிறேன், கூட்டங்களை ஒழுங்கு செய்வதற்காக நானே சொந்தமாக ஏற்பாடு செய்கிறேன். நான் அப்படியே நல்லவிதமாக... ஓ, எனக்குத் தெரியவில்லை, அறிக்கை செய்தல் ஆத்துமாவுக்கு நல்லது என்று எண்ணுகிறேன், நீங்கள் அவ்வாறு எண்ணவில்லையா-? நானும் கூட இக்காரியங்களைக் குறித்து தாமதமாகத் தான் அறிந்து கொண்டேன். யாராவது எங்காவது எதிர்பாராதவிதமாக அதைச் செய்தால், அதை போகும்படி விட்டுவிடுங்கள். அதற்குச் ஆகும் செலவு கொடுக்கப்படவில்லை என்று அறிந்து கொண்டேன். நீண்ட காலத்திற்குப் பிறகு... அதை ஒரு ஒழுங்காக செய்ய வேண்டி உள்ளது. 5. மேலும் இப்பொழுது, நான் இந்த ஏற்பாடுகளைச் செய்ய முயற்சிக்கிறேன். நான் – நான் திருமதி. ஆர்னால்டை காணப் போகிறேன். நான்... நான் இங்கே கூட்டங்களைக் கொண்டிருந்த போது, லூயிவில்லிலுள்ள ஒரு மனிதன் நல்லவராக இருந்தார். அவருடைய பெயர் சகோதரன் டர்வன். அவர் ஒரு – ஒரு இரவு கூட்டமோ அல்லது இரண்டு ஆராதனைகளையோ ஏற்பாடு செய்ய விரும்பினார். நான் இந்த வாரத்தில் ஏதோவொரு சமயத்தில் டெட்டியைக் காணப் போகிறேன், அது டெட்டி ஆர்னால்டு என்று நம்புகிறேன். அதன் பிறகு, வரப்போகிற சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் என்னால் கூடுமானால், தேவனுக்குச் சித்தமானால், நான் மடிசன்வில்லில் இருக்க விரும்புகிறேன். அவர்களுக்கு 25, 30 ஊழியக்காரர்கள் உண்டு, அவர்கள் எல்லாரும் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் – ஒருவர் 600 அல்லது 700 மைல் தூரத்திலிருந்து வருகிறார். நல்லது அங்கே யாருமே இல்லை, எனவே... அங்கே இருக்கவில்லை... அது என்னுடைய தவறல்ல, ஆனால் தவறான புரிந்து கொள்ளுதலினாலும் அல்லது அவரை அழைக்காமல் புறக்கணித்ததாலும் தான். கர்த்தருக்குச் சித்தமானால், நான் அடுத்த வார இறுதியில் நான் அங்கிருக்க முயற்சிப்பேன். அதன் பிறகு 5-வது தேதியிலிருந்து 6-வது தேதி வரை நான் நியூயார்கிலுள்ள புரூக்லினில் இருப்பேன். பிறகு அங்கிருந்து... பிறகு 14, 15, 16 தேதிகளில் வெஸ்ட் விர்ஜீனியாவிலுள்ள பார்க்கர்ஸ்பர்க்கில் இருப்பேன், சென்ற இரவும் இந்த காலையிலும் இரண்டு கூட்டங்களுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இப்பொழுது, சவுத் கரோலினாவிலுள்ள சார்லட் தான் கூட்டத்திற்கான அட்டவணையில் உள்ளது, ஆனால் எனக்குத் தெரியவில்லை. அதன் பிறகு விடுமுறைகள் வருகின்றன, நாங்கள் வெஸ்ட் கோஸ்டுக்கு போகிறோம். அவர்கள் ஒரு பெரிய அரங்கத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இப்பொழுது, இந்த கூட்டங்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் அதைப் போன்று இடங்களில் நடத்தப்படும் சிறு கூட்டங்களாக உள்ளன. ஒன்று வெஸ்ட் கோஸ்டில் இருக்கப் போகிறது, இரண்டு அந்தப் பட்டணங்களில் இருக்கப் போகிறது, அதனோடு சேர்ந்திருக்கும் பட்டணம், ஓக்லாண்ட் மற்றும் சான் பிரான்சிஸ்கோவிலும் கூட்டங்கள் இருக்கப் போகின்றன. அதன் பிறகு, போனிக்ஸ் பிரதிநிதிகளின் குழு, சகோதரன் ராபர்ட்ஸ் இவ்வருடத்தில் அங்கு இருக்க முடியாதென்பதால், நான் ஒரு வகையாக அவருடைய இடத்தை எடுத்துக் கொள்ளப் போகிறேன் – மாரிகோபா பகுதி முழுவதும் கூட்டங்கள் இருக்கப் போகிறது. அது ஒருங்கிணைந்த முயற்சி. எனக்காக ஜெபியுங்கள், ஏனெனில் எனக்கு – எனக்கு ஜெபம் அவசியமாய் உள்ளது. விசுவாசமானது ஒவ்வொரு தடவையும் செயல்பட ஆரம்பித்தவுடன், பிசாசானவன் நரகத்தின் ஒவ்வொரு துப்பாக்கியையும் அதன் மேல் இவ்விதமாகத் திருப்பி விடுகிறான். நீங்கள் பாருங்கள்-? எனவே அது ஏறத்தாழ கடினமாகி விடுகிறது. 6. எனவே இக்காலை வேளையில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்கு... இப்பொழுது, நாம் தேவனுடைய நித்திய வார்த்தையில் சிலவற்றை வாசித்து, வேத வாக்கியங்களிலிருந்து சிறிது நேரம் பேசி விட்டு, அதன்பிறகு வியாதியஸ்தருக்காக ஜெபிக்க விரும்புகிறோம். ஓ, நான் அவரைக் குறித்து பேச எவ்வளவாக விரும்புகிறேன், நீங்கள் அதை விரும்பவில்லையா-? நான் வெறுமனே அவரைக் குறித்துப் பேச விரும்புகிறேன். இப்பொழுது, நான் வேதாகமத்தில் II இராஜாக்கள் 2-ம் அதிகாரம், 12-ம் வசனத்தின் ஒரு பகுதியை வாசிக்க விரும்புகிறேன். (2 இராஜா. 2:12) அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்... இப்பொழுது, ஒரு பாடத்திற்காக அல்லது பொருளிற்காக, ‘பயன்படுத்தப்பட்ட ஒரு சால்வை’ என்பதன் பேரில் பேச விரும்புகிறேன். நான் இந்தக் காலை வேளையில் உங்களுடன் பேசும் போது கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. நீங்கள் எங்களுக்காக ஜெபியுங்கள். 7. இஸ்ரவேல் தேசத்தின் இந்த ஆட்சிகாலத்தின் போது, இஸ்ரவேல் ஒரு நாடாக இருந்தது. அது ஒரு வல்லமை மிக்க தேசமாக இருந்தது. அந்த தேசத்தின் இராணுவ பாகத்தைப் பார்க்கும் போது ஒரு வகையான சமாதானமான நேரமாக அது இருந்தது, ஆனால் ஆவிக்குரிய ரீதியாக அது ஒருவகையான ஆள்மாறாட்டமான நேரமாக இருந்தது. நாம் பின்னால் பழைய ஏற்பாட்டை நோக்கிப் பார்ப்போமானால், இன்று சம்பவிக்கப் போகிறவைகளுக்கு அது உதாரணமாக இருப்பதை நாம் எப்பொழுதும் காண முடியும். வேதாகமத்தில் எப்பொழுதுமே, இப்பொழுது இருக்கிற காரியங்கள் அப்படியே ஆதியில் இருந்தவைகளுக்கு மாதிரியாய் உள்ளன. இப்பொழுது, ஆதியாகம புத்தகமானது இன்று உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு காரியத்தையும் உற்பத்தி செய்கிறதாய் உள்ளது. ஆதியாகமத்தில் தொடங்கினதைத் தவிர இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை, அதுவே தொடக்கமாயுள்ளது. ஒவ்வொரு இஸமும் (ism) அங்கு தான் ஆரம்பித்தது. ஆரம்பித்த ஒவ்வொன்றும் ஆதியாகமத்தில் தான் ஆரம்பித்தது. மேலும் உண்மையான சபையும் ஆதியாகமத்தில் தான் ஆரம்பித்தது. கள்ள விசுவாசிகளும் ஆதியாகமத்தில் தான் ஆரம்பித்தனர். அலட்சியப்போக்கும் ஆதியாகமத்தில் தான் தொடங்கியது. ஆதியாகமம் என்பது தொடக்கமாக உள்ளது. 8. இப்பொழுது, எலியாவின் ஆட்சியின் போது அல்லது எலியாவின் யாத்திரையின் போது, அவன் அந்த மணி நேரத்தின் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தான்... தேவன் பூமியில் தமக்கென ஒரு சாட்சியும் இல்லாமல் ஒரு போதும் விட்டு விடவில்லை. தேவன் தமது கரங்களை அவன் மேல் வைத்து, ஒரு சாட்சியாக நிற்கக்கூடிய ஒரு மனிதனை தேவன் எங்காவது, ஏதாவது இடத்தில் எப்போதும் கொண்டிருந்தார். எனவே ஆதியாகமம் முதற்கொண்டு – ஆதி முதற்கொண்டு அவர் அப்படிப்பட்ட நபரைக் கொண்டிருப்பாரானால், தேவன் தம்முடைய கரத்தை அவன் மேல் வைக்கக்கூடிய ஒரு மனிதனை நிச்சயமாகவே இப்பொழுதும் எங்காவது ஓரிடத்தில் கொண்டிருக்கிறார். அவர் – அவர்... இப்பொழுது, அது ஒருவருக்கு மேற்பட்டோர்; அவர் தம்முடைய கரத்தை அவன் மேல் வைக்கக்கூடிய அநேக மனிதர்களை அவர் கொண்டிருக்கிறார், எனெனில் நாம் ஒன்று சேர்க்கப்படும் நேரத்தில் – அறுவடையின் நேரத்தில் வந்திருக்கிறோம். ஆதியாகமத்தில் விதை ஊன்றப்பட்டன, இந்த 6000 வருடங்களில் அறுவடைக்காக முதிர்வடைந்திருக்கிறது; இப்பொழுது அந்த விதை தாமே ஒரு விதையாக ஆகியிருக்கிறது. அது பூ பூத்து, அதிலிருந்து கனிக்கு செல்கிறது. இப்பொழுது ஒன்று கூட்டப்படும் நேரமாக உள்ளது, அறுப்பின் நேரம், எல்லா மகத்தான காரியங்களும் தொடங்கப்பட்டன. ஆதியாகமத்தில் ஆரம்பிக்கப்பட்ட அந்த உண்மையான சபையானது கனி கொடுக்கும் நேரத்துக்கு வந்திருக்கிறது, ஆவியின் கனிகள். உலகத்திலுள்ள மனிதனின் எல்லா ஆட்சி முறைகளும் முடியப்போகும் தருணத்தில் நாம் இருக்கிறோம். மேலும் நாம்... எவருக்கும், அல்லது நாம் எப்போதும் வாழ்ந்ததிலேயே எந்த காலத்தைக் காட்டிலும் இந்த நேரமானது மகத்தான நேரமாக உள்ளது. இது அசைக்கப்படும் ஒரு நேரமாகும். பாவிகளுக்கு இது ஒரு கலக்கத்தின் நேரமாகும். ஆனால் இது கிறிஸ்தவர்களுக்கோ ஒரு அற்புதமான நேரமாகும், ஏனெனில் நம்முடைய கடைசி கொஞ்சம் முயற்சிகளைச் சேர்த்து மூட்டை கட்டி அல்லது ஒன்றாக சேர்த்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று கர்த்தரை சந்திக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இப்பொழுது, நீங்கள் சுற்றிலும் நோக்கிப் பார்க்கும் போது, இன்றைய ஜனங்கள் தேசம் எதிர்கொண்டுள்ள பெரும் கலக்கத்துடனும், வியாகுலத்தோடும் இருப்பதைப் பாருங்கள்,... 9. ஒரு சில இரவுகளுக்கு முன்பு, நான் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் அரசாங்கத்தின் பிரதிநிதியாய் வேலை பார்க்கும், இங்கே கவனித்துக் கொண்டிருக்கும் அவர்களில் ஒருவராக இருந்தார், அவர்கள், ‘சகோதரன் பிரன்ஹாமே, அந்த குண்டானது தாக்கும் போது, தரையில் ஜன்னலிலிருந்து விலகி, இனிமேல் படுங்கள் என்றோ அல்லது கட்டிடத்தின் அடித்தளத்திற்குப் போக வேண்டாம் என்றோ ஜனங்களுக்கு ஆலோசனை கூற வேண்டாம் என்று அரசாங்கத்தால் நாங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளோம், ஏனெனில் இந்த புதிய குண்டானது மாஸ்கோவிலிருந்து லூயிவில்லிலுள்ள நாலாவது தெருவுக்கு ரேடியோ மூலமாக செலுத்தப்பட்டு சரியாக அத்தெருவைத் தாக்க முடியும்; இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அது செலுத்தப்பட்டு, அது வெடித்து, அநேக ஆயிரக்கணக்கான, அநேக ஆயிரக் கணக்கான பேரின் உயிரை வாங்க முடியும், நட்சத்திரங்கள் மற்றும் ராடாரினால் அது செலுத்தப்பட்டு, ரஷ்யாவுலுள்ள மாஸ்கோவிலிருந்து லூயிவில்லிலுள்ள நாலாவது தெருவின் மேல் அது மிகவும் சரியாக வந்து விழும். அது தாக்கும் போது, அவ்வாறு செய்ய வேண்டாம்...-?... விமானத்தையோ அல்லது எதையுமே பயன்படுத்த வேண்டாம், அது இங்கிருந்து சுடப்பட்டு, சரியாக அங்கே சென்று சேரும். அது பூமியில் ஒரு பெரிய துளையை உண்டாக்கும்... 175 அடி ஆழமும் 15 சதுர மைல் பரப்பளவும் கொண்ட ஒரு பள்ளத்தை உண்டாக்கும்: பதினைந்து சதுர மைல்கள்’ என்றனர். அந்த சமயம் வரும்போது, செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவெனில், விமானத்தின் மேல் மாடியில் (flight upstairs) செல்வதைத் தவிர வேறொன்றுமில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் விரும்பினால், ஒரே நேரத்தில் அவைகளில் 50 குண்டுகளையோ அல்லது 100 குண்டுகளையோ வீச முடியும். அங்கிருந்து இங்கே அந்த குண்டுகளை வீசி, எல்லாவற்றையும் முழுவதுமாக அழிக்க ஆகும் நேரம் 60 அல்லது 80 நிமிடங்கள், அல்லது சரியாகச் சொன்னால், 60 அல்லது 80 நொடிகள் தான் என்று நம்புகிறேன். லூயிவில்லுக்கும் ஹென்றிவில்லுக்கும் இடையே மற்றும் லூயிவில்லுக்கும் பார்ட்ஸ்டௌனுக்கும் இடையே அல்லது அங்கே, பூமியில் பள்ளம் ஏற்பட்டு, அதில் ஒரு குவியல் தூசியைத் தவிர வேறொன்றும் விடப்பட்டிருக்காது; அவ்வளவு தான் விடப்பட்டிருக்கும், அந்த பிரதேசத்தின் அருகிலும் அதற்கு அப்பாலும் மைல் கணக்காக, மைல்கள் கணக்காக, மைல்கள்கணக்காக அதற்கப்பாலும் எல்லாம் எரிந்து போய் விடும். அங்கே ஒன்று இடிந்து விழும் போது, அதற்கு மேல் வேறொன்று அங்கே எங்கேயோ அதை சந்திக்கத்தக்கதாக இடிந்து விழும். 10. நமக்கு ஒரு மறைவிடம் இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ‘கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான்.’ எத்தனை குண்டுகளோ அல்லது மற்ற எதுவுமோ போடப்பட்டாலும் கவலையில்லை, நாம் அங்கே பாதுகாப்பாக இருக்கிறோம். எனவே இந்த மறைவிடம் அல்லது இந்த புகலிடமானது, இந்த உலகத்திற்கோ பாவிகளுக்கோ கிடையாது. இது ஒரு அசைக்கும் நேரமாக உள்ளது. நான் ஒரு கிறிஸ்தவனாக இல்லாதிருந்தால், எந்த நேரத்தில் எது சம்பவிக்குமோ என்று எண்ணிக் கொண்டு பித்து பிடித்தவனாய் இருந்திருப்பேன் என்று நம்புகிறேன். வீடு முழுவதும் சிறு பிள்ளைகளும் மற்றும் ஒவ்வொன்றும் இருக்கையில், என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியாது. ஆனால் நான் என்னுடைய வீட்டில் நின்று, எந்த குண்டுகளும் வேறு எதுவும் தொட முடியாத ஒரு மறைவிடத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முடிவதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தராகிய இயேசுவின் பாதுகாக்கும் செட்டைகளின் கீழே. ‘பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.’ பாருங்கள்-? அதுவே நம்முடைய பாதுகாப்பு. ஜீவியத்தின் எல்லா பாவங்களும், போராட்டங்களும், சோதனைகளும் சீக்கிரமாய் போய் விடும் என்று அறியும்படியான இந்நேரம் என்ன ஒரு மகத்தானதும் மகிமையானதுமான நேரமாக உள்ளது-! இந்நாட்களில் ஒன்றில் எல்லாம் முடிந்து விடும். நாம் கர்த்தருடன் இருக்கும்படி வீட்டிற்கு போய் விடுவோம். இப்பொழுது, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் நம்மால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பேரை இந்த மகத்தான கோட்டைக்குள் கொண்டுவரும் படியான நேரம் தான் மிச்சமுள்ளது. 11. பிறகு, இன்று நம்முடைய பாடத்திற்கான மாதிரியை நாம் பார்க்கும் போது, எலியாவின் அரசாட்சியின் போது அல்லது பூமியில் எலியாவின் யாத்திரையின் போது, ஏன், அவன் ஒரு மகத்தான, வல்லமையான மனிதனாக இருந்தான். தேவன் அவனை வல்லமையான வழிகளில் மிகவும் வல்லமையாக பயன்படுத்தினார். இந்த நேரத்தில், எலியா செய்த அதே காரியங்களை செய்ய முயற்சித்து, எலியாவை பாவனை செய்ய முயற்சித்த ஒரு கூட்டம் ஆள்மாறாட்டக்காரர்கள் அங்கே இருந்தனர் என்பதைக் கண்டு கொள்கிறோம். இன்றும் அதே காரியத்தைக் காண்கிறோம்: கிறிஸ்தவத்தின் ஆள்மாறாட்டம், கிறிஸ்தவர்களைப் போல நடந்து கொள்ள முயற்சிக்கும் ஜனங்கள், தங்களையே கிறிஸ்தவர்களாக ஆக்கிக் கொள்ள முயற்சிப்பவர்கள். உங்களால் அதைச் செய்ய முடியாது. அதை தேவன் தான் செய்ய வேண்டும். பாருங்கள்-? அவர் ஒருவர் மாத்திரமே அதை செய்ய முடியும். எனவே அவர்கள் ஒரு பள்ளிக்கூடத்தை அமைத்து அதை தீர்க்கதரிசிகளின் பள்ளி என அழைத்தனர். அவர்களெல்லாரும் அந்த தீர்க்கதரிசிகளின் பள்ளிக்குச் சென்று அவர்களை பயிற்றுவித்தனர். அந்த போதகர்கள் எல்லாரும் எலியா அணிந்திருந்த மேலங்கியைப்போன்று அதே விதமான மேலங்கியை அவர்களும் அணிந்திருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவனுடைய சத்தத்தையும், அவன் பேசின பாங்கையும், அவன் தன்னை அறிமுகப்படுத்தின விதத்தையும், அவர்கள் பாவனை செய்ய முயற்சிப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அதே காரியத்தை செய்ய முயற்சித்தனர், ஏனெனில் எலியா தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். நாம் இன்றும் அதே காரியத்தைக் காண்கிறோம். சமீபத்தில் நான் ஒரு ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தேன்; பில்லி கிரஹாம் லூயிவில்லில் இருந்த முதற்கொண்டு அவர்கள் இந்த தேச முழுவதும் பில்லி கிரஹாமைப் பெற்றுள்ளனர், ஏறக்குறைய எல்லாரும் அவரைப் போலவே பாவனை செய்ய முயற்சிக்கின்றனர்: அவரைப் போலவே அவர்களும் தலையை சீவி, அவரைப்போலவே உடையணிந்து, அவரைப்போன்ற அதே சத்தத்துடன் பேசி, மேலும் மற்ற காரியங்களையும் அவரைப் போலவே செய்கின்றனர். ஆனால் உங்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதே விதமாகவும் தேவன் உங்களை எவ்வாறு உண்டாக்கி இருக்கிறாரோ அதே விதமாகவும் நீங்கள் இருக்க வேண்டும். அது தான் சரி. எனவே ஒரு வேளை அவர்களுடைய நாட்களில் எவ்வாறு இருந்ததோ அதே காரியம் இன்றும் சம்பவிக்கிறது என்பதைக் காண்கிறோம். 12. இப்பொழுது, எலியாவின் நாட்கள் எண்ணப்பட்டு விட்டன என தேவன் கண்டார், முன்னரே கண்டார். அவன் பூமியில் அதிக காலம் இருந்து விட்டான் (ஒவ்வொருவரும் இருப்பதைப் போல), எனவே அவர் எலியாவுக்கு அடுத்ததாக ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டிருக்கப் போகிறார். அவர் அவ்வாறு செய்த போது, தேவன் இம்மனிதனை அழைத்தார். அவர் அவனை அழைத்த போது, அவன் எந்தவொரு வேதாகமக் கல்லூரியிலும் இருக்கவில்லை. அவன் தன்னுடைய தாயையும் தகப்பனையும் கவனிக்கும்படி வயலில் எருதுகளை ஏர்பூட்டி உழுது கொண்டிருந்தான், தன்னுடைய கடமையைச் செய்து கொண்டிருந்தான். எலிசாவின் அடுத்து அல்லது எலியாவின் அடுத்ததாக தீர்க்கதரிசியாக இருக்கும்படி தேவன் அவனை அழைத்தார். ஒரு வேளை தீர்க்கதரிசிகளின் பள்ளிகளில் உள்ள அநேகர் தாங்கள் தான் எலியாவுக்கு அடுத்து தீர்க்கதரிசியாகப் போகின்றனர் என சந்தேகமின்றி எண்ணியிருந்தனர், எலியா தன்னுடைய ஊழியத்தை முடித்த உடனே அவர்கள் தான் அவனுடைய சால்வையை அணிந்து கொள்ளப் போவதாக எண்ணியிருந்தனர். ஆனால் தேவன் தான் அழைக்கிறார். தேவன் தான் தெரிந்து கொள்ளுதலைச் செய்கிறார். தேவனே தெரிந்தெடுக்கிறார். தேவன் தான் தீர்க்கதரிசியாக ஒழுங்கில் வைக்கிறார். தேவன் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை போதகர்களாகவும், சிலரை சுவிசேஷகர்களாகவும், மேய்ப்பர்களாகவும் சபையில் ஏற்படுத்தியிருக்கிறார். தேவன் தாமே அதைச் செய்கிறார். ஒரு மயிரை கறுப்பாக்கவோ அல்லது வெள்ளையாக்கவோ நம்மால் கூடாது; கவலைப்படுகிறதினால் நம் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்ட முடியாது. தேவன் தம்முடைய முடிவில்லாத கிருபையினாலும், தம்முடைய தெரிந்து கொள்ளுதலினாலும், தம்முடைய முன்னறிவினாலும் இந்தக் காரியங்களை ஒழுங்கில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு சக்கரமும் சரியாக வேலை செய்கிறது. நான் அதை விரும்புகிறேன். நான் தேவனுடைய தெரிந்து கொள்ளுதலிலும் அழைப்பிலும் விசுவாசம் கொண்டிராமல் இருந்திருந்தால், நான் இக்காலை வேளையில் நம்பிக்கை இழந்தவனாக இருந்திருப்பேன். 13. இவ்வுலகம் மனித சக்தியின் மூலமும், மனித ஞானத்தின் மூலமும், நான்கு பெரியவைகளின் (The Big Four) மூலமும் (The Big Four என்பது முதலாம் உலக யுத்தத்தின் போது, உயர்ந்த உச்ச நிலையிலிருந்த நான்கு நேச நாடுகளையும் அவைகளின் தலைவர்களையும் குறிக்கிறது – மொழி பெயர்ப்பாளர்), ஐக்கிய நாடுகள் மூலமும் தேவனுடைய நாமத்தை ஒரு போதும் உச்சரிக்கவும் கூட செய்யாத மனிதர்களின் செயலின் முடிவான விளைபலனில் (outcome) விடப்பட்டிருக்குமானால், நான் ஒரு நம்பிக்கையற்ற மனிதனாக இருந்திருப்பேன். ஆனால் அந்த முடிவான விளைபலனுக்காக அவைகளை நான் நோக்கிப் பார்ப்பதில்லை. தேவன் எழுதி வைத்திருக்கிற இங்கேயுள்ள இந்த பழைய புத்தகத்தின் பக்கங்களையே நான் நோக்கிப் பார்க்கிறேன், அவர் உரைத்த விதமாகவே ஒவ்வொன்றும் சரியாக சம்பவிக்கும். அவ்வளவு தான். எனவே நான் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவெனில் அவைகளுடன் வரிசைப்படுத்திக் கொள்வதல்ல, ஆனால் கல்வாரியுடனும் தேவனுடனும் அவருடைய வார்த்தையுடனும் வரிசைப்படுத்திக் கொண்டு அவருடைய வார்த்தையில் தரித்து இருப்பதாகும். அது அவ்விதமாக இருக்கப் போகிறதென்றோ, அது இருக்க வேண்டுமென்று தேவன் திட்டமிடும் அவ்வழியில் இருக்கப் போகிறதென்றோ அது எவ்வளவாக தோன்றினாலும் கவலையில்லை. அது வேறு எதையுமே செய்ய முடியாது. அவர் முடிவற்றவராயிருந்து, தொடக்கத்திலிருந்து முடிவு வரை அறிந்திருக்கிறார். ஒவ்வொன்றும் அவரை துதிக்கும்படி செய்கிறார். அது சரியே. எல்லா காரியங்களும் ஒன்றாக கிரியை செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொன்றும் அதனுடைய ஸ்தானத்தில் ஒழுங்காக வடிவமைக்கப் படவேண்டும். என்னே, அது ஒரு கிறிஸ்தவனில் தைரியத்தை உண்டாக்கவில்லையெனில். எதுவுமே தவறாக போக முடியாது. அவையெல்லாவற்றிற்கும் பிறகு, இது நம்முடைய வேதாகமம் அல்ல; இது அவருடைய வேதாகமமாக உள்ளது. நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவெனில், நம்முடைய விசுவாசத்தை அவர் மேல் வைத்து அவரை நம்பிக் கொண்டு, தரித்திருந்து, தேவனுடைய மகிமையை காணுதலாகும். அது எவ்வளவாக அதனுடைய ஸ்தானத்திற்கு திரும்பி வருகிறது என்றும் ஒவ்வொரு சக்கரமும் அதில் அசைவதையும் காணுங்கள். அது ஒரு வேளை ஒவ்வொரு பக்கமும் சிதறடிக்கப்படலாம், ஆனால் தேவன் வார்த்தையைப் பேசும் போது, அது அதனுடைய சரியான ஸ்தானத்தில் பிழையற்ற விதமாக அசைவாடும். அவர் தொடக்கத்திலிருந்து முடிவு மட்டும் அறிந்திருக்கிறார். அவர் யாரை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கிறார். எலிசா, எலியாவின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளப் போகிறான் என்பதை தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்பே அறிந்திருந்தார். ஒவ்வொன்றும் மிகவும் சரியாக விதத்தில் கிரியை செய்ய வேண்டும். நம்முடைய அன்பார்ந்தவர்களும் மற்றவர்களும் எப்பொழுதாவது உள்ளே வருவார்களா என்று நாம் கவலைப்படுகிறோம். அவர்களுடைய பெயர்கள் உலகத்தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அவர்கள் சரியாக அங்கே உள்ளே வருவார்கள்; அது செய்யக்கூடிய ஒரே காரியம் அதுவே. நாம் சாட்சி கொடுத்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்வோம்; அவர்களிடம் அதை கொண்டு வருவதற்கு தேவன் ஒரு காரியத்தைச் செய்வார். 14. இப்பொழுது, எலியாவைக் கவனியுங்கள். அவன் தன்னுடைய சால்வையை அவன் மேல் எறிந்த பின்பு, அவன் மீது அதை முயற்சித்தான்... வேறு வார்த்தையில் சொன்னால், தேவனுடைய சால்வையை தன்னுடைய தோள்களின் மேல் வைத்திருந்த தீர்க்கதரிசியாகிய எலியா, அது எலிசாவுக்கு பொருந்துகிறதா என்று பார்ப்பதற்காக, கீழே வந்து அதை விவசாயியான எலிசாவின் மேல் அதை வைத்தான். அது அவனுக்குப் பொருந்துவதற்காக, அவனை அதற்கேற்ப மாற்றுவதற்கு சுமார் 10 வருடங்கள் ஆனது. தேவன் வழக்கமாக நம்மை பட்டறையில் வைத்து, ஒழுங்குபட வெட்டி எடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, அவர் தன்னுடைய சால்வையை எலிசாவுக்குப் பொருந்தும்படியாக சால்வையை வெட்டி மாற்றவில்லை. அந்த வஸ்திரத்துக்கு பொருந்தும்படியாக எலிசாவைத் தான் மாற்றினார். அதைத் தான் இன்றும் அவர் செய்கிறார். அந்த வஸ்திரத்துக்குப் பொருந்தும் படியாக அவர் நம்மை மாற்றுகிறார், நமக்குப் பொருந்தும்படியாக அவர் வஸ்திரத்தை மாற்றுவதில்லை. சில சமயங்களில் அந்த வஸ்திரமானது நமக்குப் பொருந்தும்படி செய்ய வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். ஆனால் நம்மால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் வஸ்திரத்துக்குப் பொருந்தும்படியாக உங்களையே மாற்றிக் கொள்ள வேண்டும். அது தேவனுடைய வஸ்திரமாக உள்ளது. அவர் அதை பரிபூரணமாக உருவாக்கியிருக்கிறார். நாம் பெற்றிருக்கிறோம்... அந்த வஸ்திரமானது நமக்கு பொருந்தும்படி செய்வதற்காக அந்த மண்டலத்திற்குள் நம்மை அவர் கொண்டு வர வேண்டியுள்ளது. எனவே நாமாகவே பரிபூரணமாக இருக்க முடியாது; நம்மால் அது முடியாது என்று நாம் அறிவோம். அப்படியிருக்க நமக்கு எந்த வழியும் இல்லை. ஆயினும் நாம் அவ்வாறு இருக்க வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். எனவே அவர் என்ன செய்தார்-? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய நீதியையும் நமக்கு சொந்தமாக்கினார். நம்முடைய ஒன்றும் இல்லாத நம்முடைய சொந்த பரிசுத்தத்தை புறக்கணித்து விட்டு, வேண்டாத நம்முடைய சொந்த எண்ணங்களையும் விட்டு விட்டு, நாம் பயபக்தியாக கர்த்தராகிய இயேசுவின் செய்து முடிக்கப்பட்ட கிரியைகளின் மேல் இளைப்பாற வேண்டும். தேவன் அவரை பூமிக்கு அனுப்பினார், நாம் இளைப்பாறுகிற அவருக்குள் அது இருந்தது. 15. கவனியுங்கள், நாம் அறிந்தபடி இந்த வருடங்கள் எல்லாம் அவன் மேல் வரப்போகிற வஸ்திரமாகிய (சால்வையாகிய) ஞானஸ்நானத்தை உடையவனாயிருந்தான். ஆனால் அவன் அழைக்கப்பட்ட பிறகு, இந்த வருடங்கள் முழுவதும் அந்த வஸ்திரத்துக்கு அவன் பொருந்தும் படியாகவும், அவன் கர்த்தருடைய ஊழியக்காரனாக இருக்கும்படியாகவும் உள்ள அந்நிலைக்கு தேவன் அந்த மனிதனின் குணாதிசயத்தை வனைந்து கொண்டிருந்தார். பிறகு எலியா கடந்து செல்லும் வேளையில் அந்த வஸ்திரத்தை அவன் மேல் எறிந்த போது – அவர்கள் கில்காலுக்கு நேராகவும், மற்ற அநேக இடங்களுக்கும் போகத் தொடங்கினர். அவர்கள் பயணம் செய்யும் போது, தீர்க்கதரிசிகளின் பள்ளி வழியாகவும் சென்றனர். கடைசியாக எலியா, எலிசாவை பின்வாங்கிப் போகச் செய்ய முயன்றான். நீங்கள் அதைக் கவனித்தீர்களா-? அவனை வந்த வழியே திரும்பிப்போகச் செய்ய முயற்சித்தான், அவன், ‘நான்... மகனே, ஒருவேளை பாதையானது உனக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். நீ நடப்பதற்கு அது மிகவும் இடுக்கமானதாக இருக்கலாம்’ என்று கூறினான். எலியா எங்கே இருந்தான் என்று உங்களுக்குத் தெரியும், அவன் நேர்மையான வழியில் இருந்தான். எங்கெல்லாம் தேவனுடைய உண்மையான ஊழியக்காரன் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறானோ, அது பிரசங்கிக்கப் படுகிற இடத்தில், அது நேரான கலப்படமற்ற சுவிசேஷமாய் இருக்கிறது. 16. நல்லது, ஒரு நாள் அவன் தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கு அவர்களைக் காணச் சென்றான். அவன் அங்கிருந்து போய் விடும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்கள், ‘அது நமக்கு மிகவும் நேரான வழியாக உள்ளது’ என்றனர். நமக்கு இன்றைய தேவை என்னவெனில், கோதுமையை உமியிலிருந்து அல்லது தவறானதிலிருந்து சரியானதைப் பிரிக்கும் இன்னும் அதிகமான நேர்மையான சுவிசேஷ பிரசங்கங்கள் தான். சரியை சரியென்றும் தவறை தவறென்றும் கூறும் பிரசங்கங்கள். இந்த எல்லா மனிதர்களும் தங்களுடைய அனுபவத்தைக் கொண்டு, அவர்கள் அனைவரும் ஏதாவது சாப்பிடக் கொண்டுவரும்படி அனுப்பினர், அவர்களில் ஒருவன் பேய்க் கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதின் காய்களில் சிலவற்றைச் சேகரித்து, தங்களுடைய மதசார்பான பானையில் போட்டு சமைத்த போது, அதில் சாவு இருந்தது. நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவெனில், அவர்கள், ‘பானையில் சாவு இருக்கிறது’ என்று சத்தமிட்டனர். ஆனால் இரட்டிப்பான பங்கைப் பெற்றிருந்த எலியாவுக்கு (எலிசாவுக்கு) என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது, எனவே அவன் கைநிறைய மாவைப் பானையில் போட்டு, ‘இப்பொழுது, முன்னே சென்று அதை சாப்பிடுங்கள்’ என்றான். வேறு வார்த்தையில் சொன்னால், அவர்கள்... 17. இன்றும் அதை ஒரு மாதிரியாக எண்ணிப் பார்க்கிறேன், மெதொடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும், லூத்தரன்களும், பெந்தெகோஸ்தேகளும், மற்ற ஒவ்வொருவரும் ஒன்றாக கலந்தவர்களாக நம்மிடம் உள்ளனர்; ஒருவர் மற்றவருக்கு விரோதமாகச் சண்டை இடுகின்றனர். முழு காரியத்தையும் அகற்றி விட்டு, அதை விட்டு விலகி இருப்பது நமக்கு வேண்டியதில்லை; நமக்கு மற்றொரு கை நிறையவுள்ள மாவு தான் அவசியமாயுள்ளது. அதே சபையில் தொடர்ந்திருங்கள். அந்த மாவானது வீட்டிலிருந்தோ அல்லது அங்கேயுள்ள பள்ளியிலிருந்தோ கொண்டு வரப்பட்டிருக்கும். அது ஜனங்கள் கொண்டு வந்திருந்த போஜன பலியாகும்; அறுவடையின் முதற்பலனாகிய மாவிலுள்ள ஒவ்வொரு சிறு கட்டியும் ஒரே அளவாக இருக்கத்தக்கதாக அரைக்கப்பட வேண்டும். ஒரே அளவுள்ள இந்த மாவானது கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாயுள்ளது. மாவு ஜீவனாயுள்ளது. கிறிஸ்துவின் மாதிரியாயுள்ள இந்த அரைக்கப்பட்ட மாவானது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் குறிக்கிறது... மாவும் போஜன பலியும்... அவர்கள் இந்த மாவை அதற்குள் போடும்போது, ஜீவனைக் கொண்டு வரும்படி கிறிஸ்து மரணத்திற்குள் வைக்கப்படுவதைக் குறிக்கிறது. அதுதான் வித்தியாசத்தை உண்டாக்குகிறது. நம்முடைய மரித்த நிலையிலும், நம்முடைய வித்தியாச பேதங்களிலும், மதரீதியான வாக்கு வாதங்களிலும் மற்றும் ஒவ்வொன்றிலும், நாம் கிறிஸ்துவைக் கொண்டு வருவோமானால், அது மரணத்தை விட்டு ஜீவனுக்குள் பிரித்துக் கொண்டு வரும், நாம் அப்படியே அதை செய்வோமானால். அமெரிக்காவில் ஒரு கோடியே தொண்ணூறு இலட்சம் பாப்டிஸ்டுகள் உள்ளனர். அமெரிக்காவில் ஒரு கோடியே முப்பது இலட்சம் மெதொடிஸ்டுகள் உள்ளனர். ஒரு கோடியே பத்து இலட்சம் லூத்தரன்கள் அமெரிக்காவில் உள்ளனர். ஒரு கோடி பிரஸ்பிடேரியன்கள் அமெரிக்காவில் உண்டு. கத்தோலிக்கர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று தேவன் மாத்திரமே அறிவார். அது எந்த ஸ்தாபனங்களையும் விட மிஞ்சி விடும். ஆனால் இவை எல்லாவற்றிலும், நமக்கு என்ன தேவைப்படுகிறது-? ஒரு கை நிறைய மாவு. சபையில் ஜீவனைக் கொண்டு வருவதே நமக்குத் தேவையாயுள்ளது. கிறிஸ்துவே ஜீவன். அவர் நமக்கு ஜீவனை கொண்டு வரும்படியாக வந்தார். 18. எனவே அவர்கள் தங்களுடைய விவாதங்களையும், தங்களுடைய பள்ளிகளையும், தங்களுடைய வேத சாஸ்திரங்களையும் இன்னும் மற்றவைகளையும் கொண்டிருந்தனர். அதன் பிறகு, எலியா, எலிசாவிடம், ‘நீ திரும்பிப்போய் விடுவது தான் நல்லது, ஏனெனில் ஒரு வேளை இந்த வழியானது கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம்’ என்று கூறினான். ஆனால் அதை ஒரு முறை சந்தித்த தேவ மனிதனால் அல்லது அவருடைய தோளில் போடப்பட்ட தேவனுடைய நீதியின் வஸ்திரத்தையும் வல்லமையையும் கொண்ட மனிதனால் அவ்வளவு எளிதாக பின்வாங்கிப் போக முடியாது. இந்தக் காலை வேளையில் மேய்ப்பர் கூறினதை நான் கேட்டபொழுது... அநேகர் சோர்ந்து போய் விடுகின்றனர். நாம் சகோதரனை தைரியப்படுத்தச் செய்வது நமக்கு அவசியமாய் உள்ளது. நாம் உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். அது சரியே. சோதனைகள் வரலாம்; அவைகளிலிருந்து நாம் பாதிக்கப்பட மாட்டோம் என்று வாக்குப்பண்ணப்படவில்லை; ஆனால் அவைகளினூடாகச் செல்வதற்கு அவர் நமக்கு கிருபையை அருளுவார். மலையானது மேலே செல்வதற்கு அதிக உயரமாகவோ, கீழே செல்வதற்கு அதிக ஆழமாகவோ, அதை சுற்றிச் செல்வதற்கு அதிக அகலமாகவோ இருந்தால், அதன் வழியாக செல்வதற்கு அவர் கிருபை தருவார். அது சரியே. சற்றும் கவலைப்பட வேண்டாம், ஆனால் கிறிஸ்துவின் மேல் உங்கள் கண்களை வைத்துக் கொள்ளுங்கள். நம்மை அதனூடாகக் கொண்டு செல்வது அவர் ஒருவர் மட்டுமே. 19. இப்பொழுது, அவர்கள் பிரயாணம் பண்ணுகையில், அவன் அந்த பள்ளிக்கு வருவதை நாம் காண்கிறோம். அவன், ‘நீ இப்பொழுது இங்கேயே இருந்து விடு. இங்கே தங்கியிருந்து, வேத சாஸ்திரம் இன்னும் மற்றவைகளின் ஒரு நல்ல போதகனாக இரு. ஏதோவொரு நாளில் நீ அநேகமாக இங்கேயுள்ள இந்த கல்லூரியின் முதல்வராக ஆகலாம். ஆனால் எனக்கு கொஞ்ச தூரம் போக வேண்டியுள்ளது’ என்றான். அவன் இருந்த இடத்தைச் சுற்றிலும் தேவனுடைய வல்லமையானது இருக்கும் போது, ஒரு தேவனுடைய மனிதன் ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்பதில் திருப்தியடைவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? இல்லை, ஐயா. அவன், ‘நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்ததரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்’ என்றான். நான் அதை விரும்புகிறேன். உங்களுடைய தாயாரிடமிருந்தோ, உங்களுடைய தகப்பனாரிடமிருந்தோ அல்லது உங்களுடைய மேய்ப்பர் இடமிருந்தோ எவ்வளவு நம்பிக்கை இழக்கச் செய்யும் காரியங்கள் வந்தாலும் கவலை இல்லை, அதனுடன் தரித்திருங்கள், அவனுடன் தரித்திருங்கள். 20. அவர்கள் யோர்தானுக்குச் சென்று, அதைக் கடந்தனர். எலியா, ‘இப்பொழுது, நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன-?’ என்று கேட்டான். அவன், ‘உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன்’ என்றான். செய்வதற்கென அவனுக்கு ஒரு வேலை உண்டென்று அவன் அறிந்திருந்தான். அவன், ‘இரட்டிப்பான பங்கு வேண்டும்’ என்றான், வெறுமனே ஒரு நல்ல வெதுவெதுப்பான அனுபவம் அல்ல, வெறுமனே ஒரு நல்ல கைகுலுக்குதல் அல்ல, அல்லது எஞ்சியுள்ள சபைகளுடன் ஒரு நல்ல ஐக்கியம் அல்ல; ஆனால் நான் இப்பொழுது இருப்பதிலேயே மிகச் சிறந்த இரட்டிப்பான பங்கைத் தான் விரும்புகிறேன். தேவன் ஒரு மனிதனை உலகத்தின் கடினமான பொறுப்பில் நியமிக்கும்போது, உலகம் பெற்றிருப்பதைக் காட்டிலும் மிகச் சிறந்த ஒன்றை அவன் கொண்டிருக்க வேண்டியதாய் உள்ளது என நான் உங்களுக்குக் கூறட்டும். சபை பெற்றிருப்பதைக் காட்டிலும் மிகச்சிறந்த ஏதோவொன்றை அவன் கொண்டிருக்க வேண்டியதாயுள்ளது. அவன் இரட்டிப்பான பங்கைப் பெற்றுக் கொள்ள செல்ல வேண்டியதாயுள்ளது. இரட்டிப்பான பங்கு தேவையான ஒரு வேளை எப்பொழுதாவது இருக்குமானால், அது இன்று தான். ஜனங்களின் மண்டலங்களில் (realms) அது தேவையாயுள்ளது. ஏதோவொரு சிறந்தது, ஏதோவொரு உயர்வானது... நான்...-?... பெரும் பயறும், மக்காச்சோள ரொட்டியும் மிகவும் நன்றாக இருக்குமென நான் எண்ணுகிறேன். ஆனால் சில சமயங்களில் நான் கொஞ்சம் உயர்ந்த நிலையை அடைய வேண்டியுள்ளது. நாமும் அதை செய்கிறோம். நாம் அதை செய்ய வேண்டியவர்களாயுள்ளோம். நாம் உயர்ந்த நிலையிலேயே தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். இஸ்ரவேலர் தொடர்ந்து ஒரே இடத்திலேயே தங்கி இருந்ததால், அவர்கள் பின் மாற்றமடைந்தனர். அவன் தொடர்ந்து முன்னோக்கி அல்லது பின்னோக்கி செல்ல வேண்டியதாய் இருந்தது. அது தான் சபையின் வழியாய் உள்ளது. 21. எனவே அவர்கள் நெடுக போய்க் கொண்டிருக்கையில், அவன், ‘அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னை விட்டு நான் எடுத்துக் கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது’ என்று சொல்லி சில நிமிட நேரங்கள் கூட ஆகியிருக்கவில்லை. இப்பொழுது, அது ஒரே குறிக்கோளை அடைய வேண்டுமென்ற நோக்கமாகவும், ஒரே குறிக்கோளை அடைய வேண்டுமென்ற இருதயமாகவும், ஒரே குறிக்கோளை கொண்ட கண்ணாகவும், வாக்குத்தத்தத்தின் மேலேயே உங்கள் கண்களை வைத்திருப்பதாகவும் உள்ளது. இக்காலையில் நீங்கள் வியாதிப்பட்டிருந்தாலோ, உபத்திரவப்பட்டிருந்தாலோ, ஒரு மகத்தான வாக்குத்தத்தம் உண்டு, அது தேவன் மூலம் மாத்திரமேயன்றி எலிசாவின் மூலமல்ல. ‘உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்... நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.’ மருத்துவர் என்ன கூறியிருந்தாலும் கவலையில்லை. எவ்வளவாக இது போயிருந்தாலும் அல்லது அது போயிருந்தாலும் கவலையில்லை. வாக்குத்தத்தத்தின் மேல் தனிக்கவனம் செலுத்துங்கள். எலியா அவனுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். ‘நான் போகும் போது, என்னை நீ கண்டால் அது உன் மேல் வரும்.’ அது ஒரு வாக்குத்தத்தமாக உள்ளது. ‘உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்.’ 22. சில சமயங்களில் நான் என்னையே நோக்கிப் பார்த்து, நான் என்னுடைய ஜீவியத்தில் அப்படிப்பட்ட ஒரு ஜெல்லி மீனாக இருந்திருக்கிறேனே என்று எண்ணுகிறேன். நான் காத்திருந்து, இராஜ்ஜியத்திற்குள் அநேக ஆயிரக்கணக்கான பேர்களை இழந்து உள்ளேன். ஏனெனில் நான் காத்திருந்து, ‘தேவனே...’ என்பேன். தெய்வீக வரத்தை அதிகமாக சார்ந்திருந்தேன். ‘கர்த்தாவே, நீர் சற்று அதை எனக்குக் காண்பித்தால், நான் என்ன செய்ய வேண்டுமென்று ஒரு தரிசனத்தை எனக்குக் கொடுத்தால்’ என்பேன். தேவன் தரிசனத்தைக் காண்பிப்பார், அதன் பிறகு நான் திரும்பி, யாராவது ஒருவர் எதையாவது என்னிடம் கூறும்படி விடுவேன். மேலும், ஓ, இச்சமயத்தில் நான் கொண்டிருப்பது போன்ற ஒரு விசுவாசத்தை நான் உணருவது மட்டுமாக நான் அவ்விடத்திற்கு ஒரு போதும் வருவதில்லை, நாம் அங்கிருந்து வெளியே நடந்தாக வேண்டும், எனெனில் அது ஒரு வாக்குத்தத்தமாக உள்ளது. அவர் செய்த காரியங்களும், அவர் நடப்பித்த சுகமளித்தல்களும், அற்புதங்களும், அவர் இறங்கி வந்து நமது பக்கத்திலுள்ள அவருடைய படத்தை எடுத்ததும், இன்னும் மற்றவைகளும் கூட உலக தோற்ற முதற்கொண்டு ஒரு போதும் அறியப்படவேயில்லை. அப்படியிருக்க ஒரு ஜெல்லி மீனைப் போன்று நிற்கிறேன். அது என்னைக் கூட சோர்ந்து போக வைக்கிறது. வாக்குத் தத்தத்தின் மீது உங்கள் கண்களை வைப்பதற்கான வேளை இதுவே. அதைத் தான், தேவனுடைய கிருபையால், நான் செய்ய வேண்டும் என்று நோக்கம் கொண்டுள்ளேன். நரகத்திலுள்ள ஒவ்வொரு பிசாசும் அதை நோக்கி சுடப்போகின்றன என்பதை உணர்ந்து கொள்கிறேன். ஆனால் தேவனுடைய கிருபையால், என்னுடைய கண்ணை வாக்குத் தத்தத்தின் மேல் வைத்திருக்கும்படி நோக்கங் கொண்டுள்ளேன். 23. எலிசா சொன்னான், ‘நீ...’ எலியா, ‘நான் போகும் போது நீ என்னைக் கண்டால், நீ கேட்டது உனக்குக் கிடைக்கும்’ என்றான். அது சரியே. நீங்கள் உங்களுடைய கண்ணை அதன் மேல் வைத்து அந்த வாக்குத்தத்தத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும். இப்பொழுது... அவன் அந்த பள்ளிக்குத் திரும்பிச் சென்று, ‘ஹே, பையன்களே, நான் இப்பொழுது எவ்வாறு அதைச் செய்து கொண்டிருக்கிறேன், நேராக தீர்க்கதரிசியின் பின்னால் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லியிருந்தால். அவன் ஒருவேளை தோல்வியடைந்திருப்பான். ஆனால் அவன் பள்ளி என்ன எண்ணுகிறது என்றோ அல்லது எல்லா ஆசிரியர்களும் என்ன நினைக்கிறார்கள் என்றோ கவலை கொள்ளவில்லை. அண்டை வீட்டார் என்ன நினைக்கிறார்கள் என்றோ அல்லது பக்கத்து வீடுகளைக் குறித்தோ அல்லது அவனை யாராவது பார்க்கிறார்கள் என்றோ அவன் கவலை கொள்ளவில்லை. அவன் வாக்குத் தத்தத்தின் மேல் தன்னுடைய விசுவாசத்தை வைத்து இருந்தான். நமக்கு இன்றைய தேவை என்னவெனில் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் விசுவாசம் வைத்து, இவர் சொல்வதன் பேரிலே அல்லது அவர் சொல்வதன் பேரிலோ கவனம் செலுத்தாமல் இருப்பது தான். ஒரு சகோதரன் சொன்னது போல்: ‘ஒரு ஊழியக்காரருக்கு ஊமையான இரண்டு சிறு பெண்கள் இருந்தனர். அவர்களுடைய... தெய்வீக சுகமளித்தலின் பேரில் குற்றம் கண்டு பிடிப்பவர்கள். அந்த பிள்ளைகள் சுகமாக முடியவில்லை’ என்று சொன்னார். குற்றம் கண்டு பிடிப்பவர்களை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்த வேண்டாம். வாக்குத்தத்தத்தின் மேல் விசுவாசத்தை வைத்திருங்கள். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். ‘விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவர்களை எழுப்புவார்.’ அவரால் ஊமையும் செவிடுமான ஒருவனை கேட்கச் செய்யக் கூடுமானால், அவரால் மற்றொரு ஊமையும் செவிடுமானவனையும் கேட்கச் செய்யக் கூடும். அவர் செய்கிற பிழையற்ற நிரூபணத்தின் மூலம் நாம் அதை அறிகிறோம். நம்முடைய விசுவாசத்தை வாக்குத் தத்தத்தின் மேல் வைத்திருப்போம், நம்முடைய கண்ணை ஒரே நோக்கத்தோடும், நம்முடைய காதை ஒரே நோக்கத்தோடும், நம்முடைய இருதயத்தை ஒரே நோக்கத்தோடும் இயேசு கிறிஸ்துவின் மேல் மட்டுமே வைத்திருப்போம்; அவர் வாக்குத்தத்தம் செய்தவைகளை அவர் செய்வார். ஓ, நாம் அதை சிந்தித்துப் பார்த்து அதைப் பெற்றுக் கொள்ளும் போது, அது முழு காட்சியையே மாற்றி விடும். தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அதை கூறியிருப்பது தேவனே. இப்பொழுது, இங்கே தேவனுடைய பிரதிநிதி அதை சொல்லுகிறான். இப்பொழுது தேவன் தாமே அதை சொல்லி இருக்கிறார். அப்படியானால் நம்மால் என்ன செய்யக் கூடும்-? நம்முடைய சிந்தையை அதன் மேல் வைத்திருப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது. ‘நான் இங்கிருந்து போகும் போது, நீ என்னைக் கண்டால், நீ வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.’ எலிசா தன்னுடைய கண்களை எலியாவின் மேல் வைத்திருந்தான். ஒவ்வொரு பக்கத்திலுமிருந்து என்ன சத்தம் வருகிறது என்பதோ, ஒவ்வொரு பக்கத்திலும் என்ன சம்பவிக்கிறது என்பதோ, முன்னாலோ பின்னாலோ என்ன சம்பவிக்கிறது என்பதோ காரியமில்லை, அவன் அதில் ஒரு போதும் கவனம் செலுத்தவேயில்லை; அவன் அந்த வாக்குத் தத்தத்தின் மேலேயே தன் கண்களை வைத்திருந்தான். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். வாக்குத் தத்த்தின் மேல் உங்கள் கண்கள்... அன்றொரு இரவில் நாங்கள் சந்தித்த சீமாட்டியாகிய சகோதரி ஸ்டைலரை நான் எண்ணிப் பார்க்கிறேன். அவள் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாள் என்று மருத்துவர் சொல்லி இருந்தார். அவளிடமோ அவளுடைய அன்பார்ந்தவர்களிடமோ ஒருபோதும் சொல்லவில்லை. அவள் சுகமடைவது எவ்வளவு கூடாத காரியமாயிருந்தது. இப்பொழுது, சகோதரனே... அவளுடைய மருமகன் அதைக் குறித்து என்னிடம் கேட்டான். நானோ, ‘அவள் வாக்குத்தத்தத்தின் மேல் தன்னுடைய கண்களை வைத்திருக்கக் கூடுமானால்...’ என்றேன். என்ன சம்பவித்தாலும் காரியமில்லை, உங்கள் கண்களை வாக்குத்தத்தத்தின் மேல் வைத்திருங்கள். 24. ஒரு சில வாரங்களுக்கு முன்பு, இங்கேயிருக்கும் சகோதரி உட்டும், சகோதரன் உட்டும் - எங்களுடைய மிக நெருங்கிய நண்பர்கள் - இரண்டு பேரும் இங்கே சபையில் இருந்தனர். நான் என்னுடைய நண்பர்களான லியோ மற்றும் ஜீனுடன் மிச்சிகனில் இருந்தேன். நாங்கள் சிகாகோ கூட்டங்களை விட்டு, வில் மற்றும் அம்புகளைக் கொண்டு இரண்டு நாட்கள் மான் வேட்டைக்குப் போகும்படியாக அவர்களுடைய சில ஜனங்களிடமாகச் சென்றேன். வழியில், என்னுடைய மனைவி என்னைப் பற்றிப்பிடித்து, ‘திருமதி. உட்டின் தாயாருக்காக ஜெபியுங்கள். அவளுக்கு புற்று நோய் உள்ளது. அது அவளுடைய முகத்தை அரித்து தின்று விட்டது. சகோதரி உட் இவ்வளவு அதிர்ச்சியோடு இருப்பதை நான் ஒருபோதும் பார்த்ததேயில்லை. அவள் அழுது கொண்டிருக்கிறாள்’ என்றாள். தேவன் சகோதரி உட்டின் பையனின் முடமான காலையும், அவளுடைய காசநோயையும் (TB) இன்னும் மற்றவைகளையும் சுகமாக்கின முதற்கொண்டு அவள் எப்போதும் விசுவாசத்தில் வீரமுள்ளவளாக இருந்திருக்கிறாள். ஆனால் அவள் சோதிக்கப்பட்டாள். அந்த இரவு நேரத்தில் அந்த அறையில் நாங்கள் ஜெபித்தோம். திருமதி.உட் என்னிடம் வந்து, ‘சகோதரன் பிரன்ஹாமே, நாம் அதைப் பார்க்கப் போகலாம்...’ என்றாள். நாங்கள் லூயிவில்லிலிருந்த அவளுடைய தாயாரிடம் சென்றோம். அவளுடைய மூக்கின் பக்கத்தில் ஒரு புற்று நோய் இருந்தது. மருத்துவர் அதற்காக சிகிட்சை அளித்திருந்தார். அது அவளுடைய மூக்கு பகுதியைச் சுற்றிலும் பரவியிருந்தது. அவளுடைய கண்ணிலிருந்து சுமார் 8 அங்குலங்கள் தள்ளி இருந்த எலும்பையும் எவ்வளவு வேகமாக அரிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக தின்று கொண்டிருந்தது. 25. நான் அறைக்குள் சென்று முழங்கால்படியிட்டு, ‘நான் அவளிடம் தனியாக பேச விரும்புகிறேன்’ என்றேன். நான் ஜெபிப்பதற்காக அந்த ஸ்திரீயுடன் அறைக்குள் சென்றேன். அந்த அறையில் இருந்தவாறு, ‘ஓ தேவனே, இந்த ஸ்திரீக்கு சம்பவிக்கப் போவதை ஒரு தரிசனத்தின் மூலம் நீர் எனக்குக் காண்பிப்பீரானால்’ என்று எண்ணினேன். தரிசனத்தில் என்ன சொல்லப்படப் போகிறதோ என்று அறியும்படி திரு.உட்டும், திருமதி உட்டும் வெளியே காத்திருந்தார்கள்... நான் அங்கே இருந்த நேரத்தில், நான் கடிந்து கொள்ளப் பட்டேன். நான் ஒரு தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்ததால் கடிந்து கொள்ளப்பட்டேன்; ஏதோவொன்று பின்னாலிருந்து, ‘நான் அழைக்கவில்லையா-? வாக்குத்தத்தமானது ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் போது, உனக்கு ஏன் ஒரு தரிசனம் தேவைப்படுகிறது-?’ என்று பேசுவது போல் தோன்றியது. எனவே நான் முழங்கால்படியிட்டு ஜெபித்தேன். நான் ஜெபிக்கையில், ஏதோ ஓன்று உள்ளே ஜெபத்திற்கு பதிலளித்து விட்டது, வாக்குத்தத்தத்தின் மேலுள்ள விசுவாசம். நான் வெளியே திரும்பி வந்து, திருமதி உட்டிடம் அதைக் குறித்துச் சொன்னேன். அவள், ‘சகோதரன் பிரன்ஹாமே, எதையாவது பார்த்தீர்களா-?’ என்று கேட்டாள். நானோ அவளிடம், ‘நான் சரியாக எதையும் காணவில்லை. ஆனால் அவருடைய வாக்குத் தத்தமானது உண்மையுள்ளது என்றும் அவர் அதைச் செய்யப் போகிறார் என்றும் என்னிடம் பேசிய ஏதோவொன்றை உணர்ந்தேன். அவர் அதைச் செய்யப் போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்’ என்றேன். 24-மணி நேரத்திற்குள்ளாக, அந்த புற்று நோய்க்கு முடிவு உண்டாயிற்று. அது சுகமாகத் தொடங்கி, அதன் மேல் தோலில் இரத்தம் உறைந்து (scab) காணப்பட்டது. நீங்கள் அறிந்து உள்ளபடி, புற்று நோயில் இரத்தம் உறைவதில்லை. அந்த புற்று நோய் மரித்து விட்டது. எனவே அது இப்பொழுது அங்கே இருந்தது, அந்த ஸ்திரீ சுகமடைந்து வீட்டிற்குச் சென்றாள். கிறிஸ்து எவ்வளவு அற்புதமானவர்-! நம்முடைய கண்களை வாக்குத்தத்தத்தின் மேல் வைத்து, தேவன் அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று... 26. ஆனால் நாம் ஏதோவொன்றிற்காக ஜெபிக்கும்போது, அதை நிறுத்தி விட்டு, ‘நல்லது, அது உடனடியாக சம்பவிக்காது, எனவே நாம் ஒரு வேளை மீண்டும் திரும்பிச் செல்வது நல்லது’ என்று கூறலாம். ஓ, இல்லை. உங்கள் கண்ணை வாக்குத்தத்தத்தின் மேல் வைத்திருங்கள். தேவன் அவ்வாறு சொல்லியிருக்கிறார்; அது அதை தீர்த்து வைக்கிறது. அதெல்லாம் அவ்வளவு தான். தேவன் அவ்வாறு சொல்லி இருப்பாரானால், தேவன் தம்முடைய வாக்குத் தத்தத்தைக் காத்துக் கொள்வார் அல்லது அவர் அந்த வாக்குத்தத்தத்தை செய்திருக்கவே மாட்டார். ஆபிரகாம் இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைத்து, நடக்க முடியாத காரியங்களையும் நடக்கும் என்று விசுவாசித்தவனாய் 25 வருடங்களாக உறுதியாய் நின்றான், ஏனெனில் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் என்று கருதினான். ஆமென். நாம், விசுவாசத்தினாலே ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கிறோம். நிச்சயமாகவே எலியா (எலிசா) தன்னுடைய கண்களை எலிசாவின் மேல் - எலியாவின் மேல் வைத்திருந்தான். 27. அவர்கள் போகிற போது... சிறிது நேரத்தில் இரதமானது வந்து ஒருவனை ஒரு புறமாகவும் மற்றவனை மற்றொரு புறமாகவும் பிரித்தது. அப்போது... அவர் எலியாவை அதன் மேல் ஏற்றினார்... அவன் இரதத்தில் ஏறி, மேலே போகையில், தன்னுடைய சால்வையை தன்னுடைய தோள்களை விட்டு எடுத்து, எலிசாவின் மேல் பின்னோக்கி எறிந்தான், ஏனெனில் எலிசா அதை அணியும் அளவுக்கு வளர்ந்திருந்தான் (நீங்கள் பாருங்கள்-?), எனவே அந்த சால்வை அவனுக்குச் சரியாகப் பொருந்தினது. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா... ஓ, என்னுடைய தொண்டை கரகர என இருப்பதை நான் உணருகையில், உங்கள் சிதறாத கவனத்தை எனக்குத் தர வேண்டுமென்று விரும்புகிறேன். நான் ஒரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். எலிசா அந்த சால்வையை பெற்றுக் கொண்டு, அதை தன்னுடைய தோள்களின் மேல் போடும் போது, அவன் எவ்வாறு உணர்ந்திருப்பான் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? ஓ, என்ன ஒரு உணர்ச்சி-! 28. நான் தனிப்பட்ட முறையில் இதைக் கூறக் கருதவில்லை, ஆனால் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நான் இங்கே இந்த பிரசங்க பீடத்திலிருந்து, ‘ஒரு கவணைக் கையில் வைத்திருந்த யுத்த வீரனான தாவீதும், அவனுக்கு முன்பாக கோலியாத்தும்’ என்ற செய்தியின் பேரில் பிரசங்கித்தேன். அந்நாட்களில் வயல்நிலத்தில் எந்த சுகமளிக்கும் கூட்டமும் இருந்ததில்லை, நாம் அறிந்தபடி, எங்குமே இல்லை. ஓ, தெய்வீக சுகமளித்தலை விமர்சிக்கிற ஜனங்கள் எவ்வாறாக உள்ளனர், ஆனால் ஒரு ஜீவனைக் (Being) கொண்டு கூட்டம் நடத்திய பிறகு, அங்கே ஏதோ ஓன்று இருந்தது. நான் என்னுடைய சிந்தையை இழந்து விட்டதாகவும், அது அவ்வாறு இருக்க முடியாது என்றும் அந்த மேய்ப்பர் என்னிடம் சொன்னார். ஆனால் இங்கேயிருக்கும் இதே மேடையிலிருந்து, நான் தாவீதைக் குறித்துப் பேசி, ‘ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திப்பதற்கு இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனை விடலாம் என்று நீங்கள் என்னிடம் சொல்ல விரும்புகிறீர்களா-?’ என்றேன். தோள் தொங்கினவனும், சுருள் முடியுள்ளவனும், ஒரு கவணைக் கையில் பிடித்தவனாய், முழு இஸ்ரவேல் இராணுவமும் அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்க, அவன் ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டவனாக தனியாக நடந்து, 19 அடி நீளமுள்ள ஈட்டியை வைத்து இருக்கும் ஒரு மனிதனிடம் வருகிறான். அவனுடைய 19 அடி நீளமுள்ள ஈட்டியின் அலகு பல சேக்கல் நிறையாயிருந்தது, ஒரு வேளை 20 பவுண்டுகள் நிறையுள்ள எஃகினால் கூர்மை ஆக்கப்பட்டிருந்தது; அவனுடைய விரல்கள் 14 அங்குல நீளமாயிருந்தது. அநேகமாக தாவீது 90 பவுண்டுகள் எடையுள்ளவனாக, சிறியதும் வலிய சண்டைக்கு வருவதுமாகிய ஒரு வீட்டுச் சேவலைப் போல நின்று கொண்டு, மேலும் கீழுமாகக் குதித்துக் கொண்டிருந்தான்... இந்த பெலிஸ்தியன் அவனுடைய இடத்தில் தங்கியிருக்க வேண்டுமானால் தங்கி இருக்கட்டும். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திப்பதற்கு இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனை விடலாம் என்று நீங்கள் என்னிடம் சொல்ல விரும்புகிறீர்களா-? (ஓ, என்னே.) ஓ, என்னே, அவன் எப்படிப்பட்ட ஒரு வீரன்-! 29. ‘நீங்கள் எல்லாரும் சண்டைக்குப் போக பயப்படுகிறீர்களா-? நான் அவனைப் பார்த்துக் கொள்ளுகிறேன்’ என்றான். ஓ, என்னே. அவன், ‘பரலோகத்தின் தேவன் இந்தக் கவணைக் கொண்டு ஒரு சிங்கத்தையும், ஒரு கரடியையும் கொல்லும்படி செய்தார். அப்படியிருக்க இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனை அவர் எவ்வளவு அதிகமாக என்னுடைய கரங்களில் ஒப்புக் கொடுப்பார்-?’ என்றான். நிச்சயமாக. அவன் முதலாவது வெற்றியைப் பெற்ற போது, கோலியாத் கீழே விழுந்தான். இஸ்ரவேலின் முழு இராணுவமும் தாவீதுக்குப் பின்சென்றது. அவர்கள் தலைகளை வெட்டித் துண்டாடினர், அவர்கள் இஸ்ரவேலரை அல்லது பெலிஸ்தியரை தங்களுடைய சொந்த தேசத்திலேயே முறியடித்தார்கள். அவர்கள் பெலிஸ்தியர்களை மூலைகளண்டையில் விரட்டியடித்து, அவர்களைக் கொன்று போட்டு, அவர்களுடைய பட்டணங்களையும் மற்றும் ஒவ்வொன்றையும் பிடித்தார்கள். அவர்கள் வெற்றி பெற்றார்கள். சகோதர சகோதரிகளே, அவர்கள், ‘தெய்வீக சுகமளித்தல் கிரியை செய்யாது. அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன’ என்று சொன்ன போதும் அதே காரியங்கள் அந்த இயற்கைக்கு மேம்பட்ட மண்டலத்தில் செய்யப்பட்டது. அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்று இருக்குமானால், தேவனுடைய நாட்களும் கடந்து போயிருக்கும். இயற்கைக்கு மேம்பட்டவைகளில் விசுவாசம் இல்லாத சபையானது முடிவில் மரித்துப்போய் தேவன் அந்த சபையை விட்டு விலகிச் சென்று விடுவார், அப்படித் தான் சம்பவிக்கும். தேவன் ஒரு வாக்குத் தத்தம் செய்து உள்ளார், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமாயுள்ளன. 30. இங்கே சில காலத்திற்கு முன்பு, சில பெண்கள் ரேடியத்தைக் கொண்டு தங்களை முட்டாளாக்கிக் கொண்டனர், அதை நீரில் அமிழ்த்தி, தங்கள் கரங்களில் அணிந்திருந்த கைக் கடிகாரங்களின் மீது அந்த ரேடியத்தைப் பூசினர்... எனக்கும் இதன் மீது ஏதோவொன்று உள்ளது. ஒரு பெண் தவறாக அதை தூரிகையில் எடுத்து தன்னுடைய வாயில் தடவிக் கொண்டாள். அது அவளைக் கொன்று போட்டது. அநேக வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் ஒரு பூதக் கண்ணாடியை (microscope) அந்த பெண்ணின் மண்டையோட்டில் வைத்துப் பார்த்தனர். அப்போது அந்த ரேடியத்தின் சத்தமானது, ‘பர்ர், ர்ர்ர், ர்ர்ர்ர்’ என்று இன்னும் கேட்டுக் கொண்டே இருந்தது. அதற்கு முடிவேயில்லை. அது தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கும். அது நிற்கவே செய்யாது. ஓ, சகோதரனே, ரேடியமானது அப்படிப்பட்ட முடிவில்லாத சத்தத்தைக் கொண்டு இருக்குமானால், முடிவில்லாத, நித்தியமான, இயற்கைக்கு மேம்பட்ட, முழுவதும் வல்லமை உள்ள, முழுவதும் வரம்பற்ற சர்வவல்லமையுள்ள தேவன் எவ்வளவு அதிகமாக மாறாதவராய் இருப்பார். அவர் ஆதியிலிருந்தது போன்ற அதே வல்லமையை கொண்டிருக்க வேண்டும், அவர் அதை எல்லா காலங்களிலும் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவர் சர்வ வல்லமை உள்ள அதிகாரமுள்ள தேவன் அல்ல. இறங்கிச் சென்று, அது அவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று சொல்லி அவருடைய வார்த்தையின் அடிப்படையில் சத்துருவுக்கு சவால் விடும் உறுதியான விசுவாசமுள்ள யாரோ ஒருவருக்காக அவர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். 31. மேலும் இப்பொழுது, என்ன சம்பவித்தது-? மகத்தான சுகமளிக்கும் கூட்டங்கள் தொடங்கின உடனே, சிறு சபைகளில் இருந்த ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஹிக்ஸ், மற்றும் ஊழியக்களத்தின் மற்ற அனேக குறிப்பிடத்தக்க மனிதர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான தேவனுடைய யுத்த மனுஷர்களும் தங்களுடைய பட்டயங்களை உருவிக்கொண்டு சென்றனர்: வருகிறவர்களையும் போகிறவர்களையும், மேலும் கீழுமாக, உள்ளேயும் வெளியேயுமாக வெட்டுகிற இந்தப் பட்டயமானது நினைவுகளை வகையறுத்து, எலும்பிலுள்ள ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறது. அது செய்யப்பட்டதை அவர்கள் கண்டபோது, அவர்கள் தங்களுடைய வேதாகமங்களை (தங்களுடைய பட்டயங்களை) உருவினவர்களாய் வெளியே நடந்தனர், தேவனுடைய கிருபையால், முழு உலகமும் ஒரு சுகமளிக்கும் எழுப்புதலைக் கொண்டிருக்கும் மட்டுமாக நாம் சத்துருவை ஜெயமெடுப்போம். செய்து முடித்தவர்களாய் இருப்போம்... இரண்டுக்கு நான்கு அளவுள்ள சிறிய சபைகளையும் (little two by four churches) மற்றவை களையும் கொண்டிருந்த சிறிய மேய்ப்பர்கள் அனல் கொண்டவர்களாய், தரிசனங்கண்டு பட்டயத்தை உருவி, முன்னே சென்று சத்துருவுக்கு சவால் விட்டனர். அது கிரியை செய்யும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்-? வியாதியிலும் உபத்திரவத்திலும் படுத்திருந்து, சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையால் சுகமாக்கப்பட்ட காங்கிரஸ்காரர் உப்ஷா, இங்கிலாந்து தேசத்தின் ஜார்ஜ் மன்னர் போன்ற மகத்தான மனிதர்கள் உள்ளனர். எனவே அவர்களால் இப்பொழுது அதைக்குறித்து எதுவும் கூற முடியாது...-?... நிச்சயமாக. அவன்... 32. அதன் பிறகு எலியாவினுடைய (எலிசாவினுடைய) முழு இருதயத்தின் வாஞ்சையும் வாக்குத் தத்தத்தைப் பெற்றுக் கொள்வதிலேயே இருந்தது. அவன் வாக்குத் தத்தத்தை விரும்பினான். அதுவே அவனுடைய நோக்கமாக இருந்தது. அதுவே அவனுடைய எல்லாமுமாக இருந்தது. அதுவே அவனுடைய ஜீவனாக இருந்தது. அதுவே அவனுடைய எண்ணமாக இருந்தது. ஒவ்வொன்றும், எல்லாமே, அந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்வதிலேயே உறுதியாக பற்றியிருந்தது. நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காரியத்தைக் குறித்து நாம் உத்தமமாக இல்லை என்பதை நம்பும்படி நான் தூண்டப்பட்டேன். இக்காலை வேளையில் உங்களுடைய முழு நோக்கமே என்னுடைய சுகத்திற்காக தேவனைத் துதித்துக் கொண்டிருப்பதின் மேலே இளைப்பாறிக் கொண்டிருந்தால்... ‘நான் தேவனுடைய வல்லமையால் சுகமாக்கப்படும்படி தீர்மானித்து விட்டேன். ஒரு கிறிஸ்தவ ஜீவியம் செய்ய தீர்மானித்து விட்டேன். தேவனிடத்தில் சமாதானமாய் நடக்க தீர்மானித்து விட்டேன். அதைச் செய்யும்படி நான் தீர்மானித்து விட்டேன். தாய் என்ன சொல்கிறார்கள் என்றோ, சபை என்ன கூறுகிறது என்றோ, மேய்ப்பர் என்ன கூறுகிறார் என்றோ, வேறு யாராவது என்ன கூறுகிறார்கள் என்றோ, உலகம் என்ன கூறுகிறது என்றோ எனக்குக் கவலையில்லை. நான் தீர்மானித்து விட்டேன். அதுவே என்னுடைய இருதயத்தின் ஒரே குறிக்கோளாய் உள்ளது.’ அப்போது தான் நீங்கள் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். அதன் பிறகு, அவன் அதைப் பெற்றுக் கொள்ள உறுதியாயுள்ளதை எலியா கண்டபோது... எலிசா உறுதியாயிருப்பதை எலியா – எலியா கண்டான்; அவன் அவனுக்கு வாக்குப் பண்ணினான். இப்பொழுது, அந்த வாக்குத்தத்தமானது, ‘நான் போகும் போது, நீ என்னைக் காணக்கூடுமானால், நான் இதை விட்டுப்போகும் போது நீ என்னைக் காணக் கூடுமானால்...’ என்பதாக இருந்தது. இப்பொழுது, அது எலிசாவிடம் விடப்பட்டிருந்தது. அவன் அந்த வாக்குத்தத்தத்தைக் கேட்க விரும்பினான், எனவே அந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொண்டான். இப்பொழுது, நீ அதைச் செய்தால், அது உனக்குக் கிடைக்கும் என்பதாக உள்ளது. ‘நான் போகையில் நீ என்னைக் கண்டால்’ என்பதாக உள்ளது. இப்பொழுது, இக்காலை வேளையில், நீங்கள் வியாதியஸ்தராயிருந்து சுகமடைய விரும்பினால், கிறிஸ்து உங்களுக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், வாக்குத்தத்தம் உங்களுடையதாக உள்ளது. தோற்கடிக்கப் படாதிருங்கள். 33. இப்பொழுது, எலியாவின் சால்வையினால் தீர்க்கதரிசியாகிய எலிசா தன்னைப் போர்த்திக் கொண்டான்... எப்படிப்பட்ட ஜெயவீரனின் அணிவகுப்பு, ஒரு ஜெயவீரனைப் போன்ற எப்படிப்பட்ட ஒரு நடை. அவன் வாக்குத்தத்தத்தைக் கேட்டிருந்தான். அவன் வல்லமையை உணர்ந்தான். அவன் ஒரு யுத்த வீரனைப் போன்று யோர்தானுக்கு நடந்து வந்தான். நண்பர்களே, தேவனுக்குத் துதியுண்டாவதாக. இக்காலையில் கிறிஸ்துவினுடைய நீதியின் வஸ்திரம் உடுத்தின ஒவ்வொரு விசுவாசியும் யோர்தான் சாலையை நோக்கி நடந்து வருகின்றனர். அது சரியே. அணுகுண்டுகள் வரட்டும். அது...-?... நீங்களோ வஸ்திரம் தரித்தவர்களாய், ஒரு ஜெயவீரனாய் நடந்து வருகிறீர்கள். ஆமென். நான்... ‘பயப்படாதீர்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.’ ஆம், ஐயா. அது ஞாபகம் உள்ளதா-? ‘நான் உலகத்தை ஜெயித்திருக்கிறேன்.’ கிறிஸ்து அவ்வாறு கூறினார். எலிசா பயன்படுத்தப்பட்ட ஒரு சால்வையை (second- handed robe) அணிந்தவனாக ஒரு ஜெயவீரனைப் போன்ற உணர்ச்சியுடன் யோர்தான் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான் (அது சரியே). சகோதரனே, நான் இதை மரியாதையுடன் உங்களிடம் கூறட்டும். வேறு யாருடைய வஸ்திரத்தாலும் உங்களைப் போர்த்திக் கொள்ளாதீர்கள். அந்த வஸ்திரங்கள் எல்லாம் சந்தேகத்தின் விட்டில் பூச்சிகளால் அரிக்கப்பட்டதும், எல்லாமே தோல்வி அடைந்ததும், மூடநம்பிக்கைகளை உடையதும், மேடுபள்ளங்களை உடையதும், அதில் ஓட்டைகள் இருந்து, அது முழுவதுமாக ஒழுகுவதுமானதுமாக உள்ளது. நீங்கள் ஜெயவீரராகிய கிறிஸ்துவின் வஸ்திரத்தைத் தரித்துக் கொள்ளுங்கள். முன்னொரு காலத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் இரட்சிப்பைக் குறித்துப் போதித்து, ஒரு காலத்தில் தெய்வீக சுகமளித்தலைக் குறித்துப்போதித்து, தற்போது அதை மறுதலிக்கும், அவிசுவாசத்தின் விட்டில் பூச்சிகளாலும் மற்ற ஒவ்வொன்றாலும் அரிக்கப்பட்ட உங்கள் சபையில் நம்பிக்கையை வைக்க வேண்டாம். ஒரு யுத்தத்திலும் தோல்வியடைந்திராத அவருடைய வஸ்திரத்தால் உங்களைப் போர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் யோர்தானுக்குச் செல்லும் பாதையில் இருக்கிறீர்கள். ஆமென். 34. இப்பொழுது, ஒரு பயன்படுத்தப்பட்ட அங்கி அவனிடம் இருந்தது; அது உண்மை. இந்தக் காலை வேளையில் அனேக ஜனங்களிடம் பயன்படுத்தப்பட்ட அங்கிகள் உள்ளன. ஆனால் அவன் யோர்தானண்டையில் வந்த போது, அந்த சால்வை மாத்திரம் கிரியை செய்யாது என்பதை உணர்ந்து கொண்டான். அது சரியே. ஓ, சபை, மெதொடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகோஸ்தேக்கள், பிரஸ்பிடேரியன்களாகிய நம்மிடம் பள்ளிகள் உண்டு, என்னே, உண்மையல்லாத வேதாகமத்தின் கோட்பாடுகள் எல்லாம் நம்மிடம் உண்டு. வாக்குத் தத்தங்களாகிய சரியான முறையில் நெய்யப்பட்ட வஸ்திரங்கள் எல்லாவற்றையும் நாம் பெற்றுள்ளோம். அவையெல்லாவற்றையும் நாம் பெற்றுள்ளோம். ஓ, நாம் ஞானஸ்நானம் பெற்று, சென்று, மிகவும் அப்போஸ்தல பிரகாரமாக இருக்கிறோம். நாம் அப்போஸ்தல விசுவாசத்தை கொண்டிருக்கிறோம். நாம் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டு உள்ளோம். நாம் தேவனிடத்தில் விசுவாசமாய் இருக்கிறோம். தேவனுடைய வல்லமையில் விசுவாசமாய் இருக்கிறோம். வேதாகமத்தில் உள்ள பிரகாரமாக, வேதாகமம் கூறுகிற பிரகாரமாக நாம் ஞானஸ்நானம் பெற்றுள்ளோம். நாம் பரிசுத்த ஆவியைப் பெற்று இருக்கிறோம். நாம் அந்நிய பாஷைகளில் பேசுகிறோம். நாம் அவையெல்லாவற்றையுமே செய்கிறோம். ஆனால், சகோதரனே, அது மாத்திரமே உனக்கு அவசியமானால், நீ யோர்தானுக்கு வரும் போது, நீ உன்னுடைய குறைவை அதிகமாக கண்டு கொள்வாய். ஓ, நீ ஒரு வேளை போதிக்கலாம்; நீ ஒருவேளை கூர்மையான அறிவு படைத்தவனாக இருக்கலாம்; நீ ஒரு வேளை வேத சாஸ்திர டாக்டர் பட்டம் (D.D., Doctor of Divinity) பெற்றவனாக இருக்கலாம். நீ ஒரு வேளை தத்துவ மேதையாக (Ph.D., Doctor of Philosophy) இருக்கலாம். ஒரு வேளை லத்தீன் மொழியில் டாக்டர் பட்டம் (L.L.D., Doctor of Latin) பெற்றிருக்கலாம். நீ ஒரு வேளை எல்லா வகையான பல்கலைக்கழக பட்டங்களையும் கொண்டிருக்கலாம். நீ ஒருவேளை உன் மேல் மெதொடிஸ்டு சபையின் வஸ்திரத்தைக் கொண்டிருக்கலாம். நீ ஒரு வேளை உன் மேலே பெந்தெகொஸ்தே சபையின் வஸ்திரத்தைக் கொண்டு இருக்கலாம். நீ ஒரு வேளை உன் மேல் அசெம்பிளிஸ், அல்லது ஒருத்துவக்காரர்கள், அல்லது திருத்துவக்காரர்கள், அல்லது யாருடைய வஸ்திரத்தையும் கொண்டிருக்கலாம். அது தொடக்கத்திலேயே ஒரு பயன்படுத்தப்பட்ட அங்கியாக மாத்திரமே உள்ளது (அது சரியே.), மனுஷரால் உண்டாக்கப்பட்டு, போதிக்கப்பட்ட சில கோட்பாடுகள் மற்றும் அதைப் போன்றவைகள். 35. நீ ஒரு கிறிஸ்தவனாக இருந்தும், சபையானது ஒரு கிறிஸ்தவனைக் கொண்டிருந்தும், சரியாக வஸ்திரம் தரித்திருந்தும் கூட... ஆனால் எலிசா என்ன செய்வானோ என்று எதிர்பார்த்துக் கொண்டு அந்த ஆற்றங்கரை முழுவதும் நின்று கொண்டிருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் குற்றம் கண்டு பிடிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும்படியாக எலிசா நின்று கொண்டிருந்தான்... மேலும் அவன் எலியாவின் சால்வையை தன் மேல் போர்த்தினவனாக இங்கே நடந்து வருகிறான். ஓ, என்னே. வேறு வகையாக பள்ளிக்கு அவன் அனுப்பப்பட்டு இருந்தான்; அவன் கற்பிக்கப்பட்டிருந்தான்; அவன் ஒப்புக் கொடுத்திருந்தான்; அவன் விசுவாசிக்கிறான். அவனிடம் எந்த தவறும் இல்லை. அவன் யோர்தானுக்கு வந்து கொண்டு இருக்கிறான். உலகமானது அவனைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஓ, தேவனே, இன்று அது எவ்வளவாக தேவையாயுள்ளது. அநேகர் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று, மேதைகளாய் இருந்து, வேதாகமத்தை கிழித்துப் போட்டு விட்டு, கணிதத்தின் மூலம் அதை ஒன்று சேர்க்கக் கூடும்... போதனையின் வழிகளில் மகத்தான காரியங்களைச் செய்யக் கூடிய அநேக மனிதர்கள், அவர்கள் வேதாகமச் சரித்திரத்தை துல்லியமாக அந்த நொடிப் பொழுதிலேயே அறிந்து, எந்த மணி நேரத்தில் நரகமானது பற்றி எரிந்தது என்றும் எந்த மணி நேரத்தில் அது அணைந்து போகும் என்றும் உங்களிடம் கூற முடியும். இந்த எல்லா காரியங்களையும் அவர்களால் உங்களிடம் கூற முடியும். அவர்கள் – அவர்கள் தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர். அவர்கள் அழைக்கிறபடி, வஸ்திரமாகிய (the robe) ஆவிக்குரிய ஞான ஸ்நானத்தையும் அவர்கள் பெற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொன்றையும் ஒழுங்கில் வைத்து உள்ளனர். அதைத் தான் எலியாவும் செய்தான். 36. ஆனால் அவன் நெருக்கடியான உலகத்தை எதிர்கொள்வதற்கு யோர்தானிடம் வந்த போது, அவன் என்ன கூக்குரலிட்டான்-? ‘எலியாவின் தேவன் எங்கே-?’ அதை செய்தது எலியாவின் சால்வையல்ல. அதை செய்தது எலியாவின் தேவனுடைய வல்லமையாக இருந்தது. இந்தக் காலை வேளையில் உலகத்திற்குத் தேவை என்னவெனில் எலியாவின் தேவனுடைய வல்லமையாகும். நீங்கள் ஒரு வேளை அந்நிய பாஷை பேசிக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் தரையில் ஓடலாம், ஆனால் நமக்குத் தேவை என்னவெனில் அப்போஸ்தலர்களின் காலத்தில், அந்த நாளில் ஜீவித்த ஜீவனையும் காரியங்களையும் இயற்கையாகவே விளைவிக்கும் பெந்தெகோஸ்தேயின் தேவனின் வல்லமையாகும். ஒரு பயன்படுத்தப்பட்ட அங்கி எல்லாம் சரிதான், ஆனால் அவனுடைய இருதயத்தில் தேவனிடத்திலிருந்து ஒரு கிளர்ச்சி உட்டப்பட்ட அழைப்பு தேவையாயிருந்தது. தேவனிடத்திலிருந்து அவனுக்கு ஒரு புத்தம் புதிய அபிஷேகம் தேவைப்பட்டது. அவன் ஆற்றண்டை வந்த போது, ஒரு பயன்படுத்தப்பட்ட அங்கியை அணிந்திருந்தான், ஆனால் அவனுக்கு ஒரு புத்தம் புதிய – தேவனிடத்திலிருந்து முதல்தரமான அழைப்பு தேவைப்பட்டது. அற்புதங்களை நடப்பிப்பதற்கு தேவனிடத்திலிருந்து ஒரு முதல்தரமான வல்லமை தேவைப்பட்டது. 37. என் சகோதரனே, தேவனிடத்தில் எதையும் கேட்பதற்கு நீ பயப்படாதே. தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற எதற்காகவும் தேவனிடம் வற்புறுத்திக் கேள், அல்லது அது வேண்டுமென்று தேவனிடம் கேள். நான் சர்வ வல்லமையுள்ளவரும் முழுவதும் வல்லமை உள்ளவருமான ஒரு தேவனை அறிமுகப்படுத்தி, நான் தேவனுடைய ஊழியக்காரனாக இருப்பேனானால், நான் தேவனுடைய கிரியைகளை கட்டாயமாக செய்தாக வேண்டும். நான் தேவனுடைய கிரியைகளைச் செய்தால், இந்தக் காரியங்கள் சம்பவிக்கும்படி தேவனுடைய மனுஷனாய் நான் இருந்தாக வேண்டும், ஏனெனில் கூடாத காரியங்களையும் செய்யும்படி அவர் என்னிடம் கூறியுள்ளார். நான் அவரிடம் கேட்க வேண்டியதாய் உள்ளது. நான் அவரை அழைத்து, ‘தேவனே, நீர் அதை வாக்குத்தத்தம் பண்ணியுள்ளீர்’ என்று கூறிக்கொண்டு அங்கே நிற்க வேண்டியுள்ளது; ஒவ்வொரு மனிதனும் அதையே செய்ய வேண்டும். ‘பரிசுத்த ஆவி உங்கள் மேல் வந்த பிறகு, நீங்கள் வல்லமையைப் பெற்றுக் கொள்வீர்கள்.’ (அப். 1:8). பரிசுத்த ஆவி உங்கள் மேல் வந்த பிற்பாடு, நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக வஸ்திரம் தரிப்பிக்கப்பட்ட பிற்பாடு, உங்கள் விசுவாசத்தை கிறிஸ்துவின் மேல் வைத்த பிறகு, நீங்கள் வல்லமையைப் பெற்றுக் கொள்வீர்கள். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஆம். மேலும், சகோதரனே, சகோதரியே, அந்தக் காலை வேளையில் ஒவ்வொருவரும்... வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்பாக நான் இதைக் கூறுவேனாக, தேவனுடைய ஒத்தாசையினால் நான் இதை கூறுவேனாக, நான் தாவீது மற்றும் கோலியாத்தின் பேரில் இந்த மேடையில் 10 வருடங்களுக்கு முன்பதாக நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டு இருக்கையில் நீங்கள் எனக்காக ஜெபித்தீர்கள். இப்பொழுது, இது என்னைத் தடை செய்யும் கோலியாத் அல்ல. தேவன் எனக்கு முன்பாக அவனைக் கொன்று போட்டார். ஆனால் எனக்கு முட்டுக்கட்டையாய் இருப்பது என்னவெனில், விசுவாசக் குறைவு தான், ஏதோவொரு குறைபாடு என்னைச் சுற்றிலும் இருந்ததை அறிந்து கொண்டேன். இந்தக் காலை வேளையில் இச்சிறு கூடாரத்தின் முன்பதாக நான் மீண்டும், ‘இந்த வாக்குத்தத்தத்தை கொடுத்த தேவன் எங்கே-? அதோ அங்கே என்னைச் சந்தித்த தேவன் எங்கே-? தேவனே, முன்னால் வந்து, எனக்கு தைரியத்தை தாரும், பலத்தை அருளும், அசையாத உறுதியான சிந்தையை எனக்குத் தாரும், என்ன வந்தாலும் போனாலும், அது எவ்வளவு இருளாக இருக்கிறது என்றோ அல்லது அது எவ்வாறு தோற்றமளிக்கிறது என்றோ, அது எதைப் போன்று காணப்படுகிறது என்றோ அக்கறையில்லை, முன்னே செல்லுங்கள்; வாக்குத்தத்தம் உண்மையாயுள்ளது’ என்று கதறிக் கொண்டிருக்கிறேன். 38. சகோதரனே, சகோதரியே, இந்நாட்களில் ஒன்றில்... இக்காலை வேளையில் இங்கே இருக்கும் பாவியான நண்பர்களே, கிறிஸ்தவத்தைப் பாவனை செய்ய முயற்சிக்கும் ஜனங்களாகிய உங்களிடம் தான், நீங்கள் சபையை சேர்ந்து கொள்ளலாம். அது மிகவும் அருமையானது. அதற்கு விரோதமாக நான் எதையும் கூறவில்லை, நீங்கள் மெத்தப் படித்த உங்களுடைய அருமையான கல்விக்கு விரோதமாகவோ, அல்லது உங்களுடைய வேத சாஸ்திரத்திற்கு விரோதமாகவோ நான் எதையும் கூறவில்லை. நான் அதற்கு விரோதமானவன் அல்ல. ஆனால், ஓ, தேவன் எங்கே-? அவை எல்லாவற்றிற்கும் பிறகும் அது எலியாவல்ல. அந்த நதியை பிளந்தது எலியாவல்ல. அது அவனுடைய சால்வையல்ல. எலிசா அந்த சால்வையை தன்னுடைய தோளில் வைத்து இருக்கிறான்; எலியா அதை மடித்து வைக்கும் அதே விதமாக அவன் அதை மடித்து வைத்து இருந்தான். ஆனால் அவன் அதை ஒருவிதமாக அசைத்த போது, அங்கே எந்த வல்லமையும் இல்லாதிருந்தது. பிறகு, தேவன் எங்கோ இருந்தார் என்பதை அறிந்தவனாக, ‘அந்த தேவன் எங்கே-? அவர் எங்கே-?’ என்று கதறினான். அப்போது ஏதோவொன்று அந்த தீர்க்கதரிசியை அசைத்தது, அவன் அந்த சால்வையை வீசி, தண்ணீரில் அடித்தான், அவள் (நதி) இங்கும் அங்குமாக பிளந்தாள். அந்நாளின் பாதிரிமாரின் முன்னிலையில், அந்த நாளின் குற்றம் கண்டு பிடிப்பவர்களின் முன்னால், அவனுக்கு முன்பாக எலியா யோர்தானைக் கடந்து சென்றது போல இவனும் அதைக் கடந்து சென்றான். 39. நமக்கு போதனை அவசியமில்லை; நம்மிடம் அது உள்ளது. ஆனால் நமக்கு எலியாவின் தேவன் தான் தேவையாயுள்ளது. எது எப்படியிருந்த போதிலும், எலியாவின் தேவனின் வல்லமை சபையில் மீண்டும் வருவதும், அதைப் பற்றிப் பிடிக்க வைக்கும் வல்லமையும், தேவனுடைய வார்த்தையே சரியானது என்று அழைப்பு விடுப்பதும் தான் நமக்கு அவசியமாய் உள்ளது. இக்காலை வேளையில், இங்கே இருக்கும் நாம் ஒவ்வொருவரும் யோர்தானை நோக்கியுள்ள நம்முடைய பாதையில் செல்லும் மனிதர்களாய் இருக்கிறோம். அவன் யோர்தானுக்கு வந்த போது... இந்தக் காலை வேளைகளில் ஒன்றில் அல்லது இந்த இரவு வேளைகளில் ஒன்றில் நாம் அவ்விடத்தை அடையப் போகிறோம். அவன் யோர்தானுக்கு வந்த போது, அவன் ஒரு ஜெயவீரனைப் போல நடந்து சென்று கொண்டிருந்தான். ஆனால் அவன் யோர்தானுக்கு வந்த போது, அது வித்தியாசமான ஒன்றாக இருந்தது. அவன் பயன்படுத்தப் பட்ட ஒரு அங்கியை தன் மேல் கொண்டிருந்தான்; மற்றொரு மனிதனும் அதை அணிந்து இருந்தான். ஆனால் அது ஒரு நல்ல அங்கியாக இருந்தது, அந்த அங்கியை அணிந்திருந்த அந்த மனிதனை அவன் அறிந்து கொண்டான். 40. சகோதரனே, சகோதரியே, இக்காலைகளில் ஒன்றில் நான் யோர்தானுக்கு வர வேண்டியவனாக உள்ளேன். இந்த பிற்பகல் வேளையில் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். சகோதரன் மற்றும் சகோதரி ரைட்டிடம் நாங்கள் போகிறோம். அதை மறந்து போக வேண்டாம்; இது அவர்களுடைய சந்தோஷமான திருமண நாளாக உள்ளது. நான் இங்கே சபையை விட்டு, அவர்களுடன் ஒரு விருந்திற்குப் போக வேண்டியவனாக உள்ளேன். அன்றொரு நாளில் ஐம்பது வயதைக் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். அவர்களிருவரும் நல்ல வயதானவர்களாகவும், துன்பப்படுகிறவர்களாயும் அவர்களைக் காண்கிறேன். நான், ‘ஆம், எனக்கு 47 வயதாகிறது; நான் பிறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே அவர்களுக்கு விவாகமாகி விட்டது’ என்று எண்ணினேன். 47, நான் யோர்தானை நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறேன். நான் அங்கு வரவேண்டியவனாக உள்ளேன். நான் அங்கே சென்றடைய வேண்டியவனாக உள்ளேன். நான் அங்கே சென்றடையப் போகிறேன். அது சாலையில் நடக்கும் ஒரு எதிர்பாராத விபத்தாக இருக்கலாம். நான் ஆகாய விமானத்திலிருந்து ஒரு வேளை விழ நேரிடலாம். நான் ஒருவேளை பிசாசினுடைய இலக்காக எங்கோ ஓரிடத்தில் சுடப்பட்டு மரிக்கலாம். நான் எப்படி போய்க் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு காரியம் எனக்குத் தெரியும்: நான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் யோர்தானை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் நான் அங்கு அடையும் போது, நானும் கூட ஒரு பயன்படுத்தப்பட்ட அங்கியைப் பெற்றிருக்கிறேனா என்ற ஒரு காரியத்தை அறிய விரும்புகிறேன். நான் என் மேல் நம்பிக்கை வைக்கவில்லை, ஏனெனில் அது நல்லதல்ல. எலியாவின் அங்கியை எலிசா பெற்றுக் கொண்ட உடனே, அவன் தன்னுடைய அங்கியை கிழித்தெறிந்து விட்டான். நான் கிறிஸ்துவை கண்டு கொண்ட போது, அதே விதமாகத்தான் இருந்தது. என்னுடைய சுயத்தையும், என்னுடைய சொந்த கருத்துக்களையும், என்னுடைய சொந்த முட்டாள்தனத்தையும், என்னுடைய சிறிய இழிவான காரியங்களையும் கிழித்து எறிந்து விட்டேன். நான் பாப்டிஸ்டு சபையின் ஒரு சிறிய பிரசங்கியாக இருந்த போது, நான் யாரோ ஒருவன் என்று எண்ணினேன். ஆனால் நான் அதை கிழித்தெறிந்து விட்டேன். நான் அவருடைய வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டேன். நான் யோர்தானண்டையில் வரும்போது, அவருடைய வஸ்திரத்தால் போர்த்தப்பட்டவனாக என்னை நானே காண விரும்புகிறேன். அவர் அதை பின்தொடர்வார். நாம் ஒரு நாளில் அங்கே சென்றடைவோம். எனவே நாம் ஒருகணம் ஜெபிப்போம். 41. பரலோகப் பிதாவே, இந்தக் காலை வேளையில் நாங்கள் ஜெயவீரர்களாக எங்களுடைய யோர்தானை நோக்கிய அணிவகுப்பில் இருக்கையில், ஏதோவொரு நாளில் யோர்தான் அண்டையில் இருக்க வேண்டியவர்களாயுள்ளோம்; அது தான் மரணமாகும். மேலும், ஓ, தேவனிடத்திலிருந்து பிரிக்கப்படுதல் என்பது என்ன ஒரு பயங்கரமான காரியம். எங்களால் அதைக் கடக்க முடியாது. இல்லை. ஆனால் எலியா (எலிசா) அங்கே சென்றடைந்த போது, அவன் எலிசாவின் சால்வையை – எலியாவின் சால்வையை தன்மேல் கொண்டிருந்தான். அந்த சால்வையை அவன் எடுத்த போது... உமது பார்வைக்கு பிரியமானவனான எலியாவை நீர் ஏற்றுக் கொண்டு, பரலோகத்திற்குள் உம்மோடு கொண்டு போனீர். எலிசா அவனுடைய சால்வையை அணிந்திருந்தான், எனவே அவன் எலியாவின் சால்வையுடன் மரணமாகிய யோர்தானண்டையில் இருந்தான். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது, யோர்தான் திறந்து கொண்டது, அவன் அதைக் கடந்து சென்றான். அன்புள்ள தேவனே, ஏதோவொரு நாளில் நாங்கள் அங்கு வர வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாங்கள் எங்களுடைய நல்ல கிரியைகளைக் கொடுக்க முடியாது; எங்களிடம் எதுவும் இல்லை. உலகத்திலுள்ள எதையும் எங்களால் கொடுக்க முடியாது. நான் எதையும் கொடுக்க முயற்சிக்க கூட விரும்பவில்லை, ஆனால் நான் இயேசுவின் தகுதியின் பேரிலேயே முழுவதுமாக நம்பிக்கை வைத்து உள்ளேன். நீர் அவரை ஏற்றுக் கொண்டு, அவரை மரணத்திலிருந்து உயிரோடெழச் செய்தீர். அவர் தேவனுடைய சமூகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அங்கே அது என்றென்றுமாக ஜீவித்துக் கொண்டிருக்கும். மேலும், தேவனே, நான் அதை உம்மிடம் கொடுக்க விரும்புகிறேன், நான் அவர் மேல் விசுவாசம் கொண்டிருக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன். அவர் கிருபையினாலே தம்முடைய வஸ்திரத்தால் எங்களை உடுத்துவித்துள்ளார். பிதாவே, இப்பொழுதுள்ள யுத்தத்தின் நாட்களில் நீர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். தேவனுடைய மனுஷன் தேவனுடைய கிரியைகளை செய்தாக வேண்டும், நாங்கள் கிறிஸ்துவின் வஸ்திரமாகிய பரிசுத்த ஆவியின் வல்லமையை பெற்றுக் கொண்டு, அவரில் ஜீவித்த தேவனுக்காக நாங்கள் அழைக்கட்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அதை அருளும். நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் அதைக் கேட்கிறோம். 42. நம்முடைய தலைகளை நாம் வணங்கி இருக்கையில், இந்த வஸ்திரம் இல்லாமல் யோர்தானுக்கு நடந்து செல்ல முயற்சிக்கும் ஒரு நபராவது இங்கே இருக்கிறார்களா என்று இந்த காலை வேளையில் நான் வியப்படைந்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேல் இயேசு கிறிஸ்துவின் வஸ்திரமில்லாமல் இருந்து, ஒரு சமயம் தேவ குமாரனின் மூலமாக அதை அணிந்திருந்த ஒரு நபராவது இங்கிருந்தால், இக்காலை வேளையில் உங்களிடம் அது இல்லாமல் இருக்குமோ என நான் வியப்படைகிறேன். நீங்கள் தேவனிடம் உங்கள் கரங்களை உயர்த்தி, ‘அன்புள்ள தேவனே, இப்பொழுது இந்த மணி வேளையில் நான் அதை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறுங்கள். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய... உயர்த்தும் வேறு யாராவது உண்டா-? மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப் பாராக. உங்களுடைய கரத்தை உயர்த்தும் வேறு யாராவது இருக்கிறீர்களா-? சிறு பையனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? அங்கே பின்னாலிருக்கும் ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 43. அப்படியே இதைக் கூறுங்கள், ‘இக்காலை வேளையில், தேவ ஒத்தாசையால், நான் என்னுடைய சுய நீதியையும், என்னுடைய சொந்த கருத்துக்களையும், என்னுடைய சுகபோகத்தின் நினைவுகளையும், பெரிய நேரத்தையும், நான் ஜீவித்துக் கொண்டிருக்கும் பாவத்தையும் நான் விட்டுவிட விரும்புகிறேன். கிறிஸ்து தம்முடைய வஸ்திரத்தை என் மீது இக் காலை வேளையில் போர்த்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் அவருடைய வஸ்திரத்தை உபயோகப்படுத்துவேன். அது பரிபூரணமான ஒன்று என நான் அறிவேன்’ என்று கூறுங்கள். மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரோ ஒருவர், ‘நான் சற்று உயர்த்துவேன்...’ என்று கூறுகிறார். நீ உன்னுடைய கரத்தை உயர்த்தி, ‘நான் இப்பொழுது என்னுடைய ஜீவியத்தில் பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். நான் அவருடைய நீதியினால் போர்த்தப்பட விரும்புகிறேன். நான் அந்நாளில் அவ்விடத்தை அடையும்போது, ‘நல்லது இப்பொழுது, நான் யாரோ ஒருவரிடம் கொஞ்சம் நிலக்கரியை வாங்கினேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் இதைச் செய்தேன்’ என்று கூறிக் கொண்டு, நான் என்னையே கொடுக்கப் போவதில்லை’ என்று கூறு. அது அருமையானது, அது மிகவும் அருமையானது. அதற்காக ஏதோவொன்று நீங்கள் ஜீவிக்கும்படியாக மரிக்க வேண்டியிருந்தது. அதைக்குறித்த செயல்பாட்டின் மூலமாக மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி, ‘கிறிஸ்துவே, நான் என்னுடைய சொந்த வழிகளை விட்டு விடுகிறேன்; நான் உம்முடைய வழிகளை ஏற்றுக் கொள்கிறேன். நான் பாதையின் முடிவுக்கு வரும் போது, நீர் என் மேல் தயவாய் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்று கூறுவீர்களா-? சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நாம் ஜெபிக்கப் போகிறோம். 44. இப்பொழுதும், நீதியுள்ள பரலோகப் பிதாவே, சில ஏழு, எட்டு, பத்து கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அவர்களுடைய தகுதி நிலைமை எனக்குத் தெரியாது. அவர்களைக் குறித்துள்ள எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர். எனக்குத் தெரியாது. ஆனால் இன்று அவர்கள் தேவையில் உள்ளனர், அவர்கள் தேவையில் உள்ளனர் என்பதை உணர்ந்துள்ளனர். அவர்கள் வந்து, இப்பொழுது சமீபமாயிருக்கும் இந்த மகத்தான நேரத்தையும், அணுகுண்டுகளையும், எங்களுக்காக காத்திருக்கும் அந்த மகத்தான காரியங்களையும் கண்டு, நெருக்கப்படுகிற காலத்தில் ஒத்தாசையை ஏற்றுக்கொள்ள வாஞ்சிக்கின்றனர். பரலோகப் பிதாவே, நீர் இந்த ஜனங்களை ஆசீர்வதித்து, இன்று உம்முடைய கரத்தை அவர்கள் மேல் வைத்து, அவர்கள் அக்கிரமங்கள் சந்தேகங்கள் எல்லாவற்றையும் நீக்கிப் போடுவீராக. அவர்களுடைய பழைமையான விட்டில் பூச்சியால் அரிக்கப்பட்ட சுயநீதியாகிய வஸ்திரங்களை அவர்கள் தூர எறியட்டும். அந்த வஸ்திரத்தில் மூடநம்பிக்கை மற்றும் சபை சார்ந்த அரிக்கும் புழுக்களும், சில்வண்டுகளும், விட்டில் பூச்சிகளும் அரித்து அதில் மற்றும் அவைகளில் பொத்தல்களை (holes) உண்டாக்கின. அதிக காலம் அதை பிடித்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை அப்படியே தூர எறிந்து, அங்கு சென்று, கர்த்தராகிய இயேசுவினுடைய வஸ்திரத்தை பெற்றுக் கொண்டு, ‘நான் அவரில் நம்பிக்கையாய் இருக்கிறேன். நான் என்னையே போர்த்துக் கொள்கிறேன், என்னுடைய நீதியிலோ அல்லது என்னுடைய சொந்த எண்ணங்களிலோ அல்ல, ஆனால் இந்த மணி நேர முதற்கொண்டு நான் உம்மில் நம்பிக்கை கொள்கிறேன்’ என்று கூறட்டும். பிதாவே, அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளும்படியாக அதை அருளும். நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். *******